அம்மாவிடமே நான் நடித்தேன் : நடிகர் ரவிக்குமார் உருக்கம்

Added : ஏப் 14, 2019 | |
Advertisement
'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்கிற மாதிரி ஆளே மாறியிருக்கிறார் நடிகர் ரவிக்குமார். வைகாசி பொறந்தாச்சு படத்தில் 'டீன் ஏஜ்' ஆக அறிமுகமானாலும், கமல் நடித்த மங்கம்மா சபதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதுதான் இவரது சினிமாவுக்காக விசிட்டிங் கார்டாக அமைந்தது. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசுகிறார்... * கைவசம் உள்ள படங்கள்...சடையா என்ற படத்தில் 5
அம்மாவிடமே நான் நடித்தேன் : நடிகர் ரவிக்குமார் உருக்கம்

'எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்' என்கிற மாதிரி ஆளே மாறியிருக்கிறார் நடிகர் ரவிக்குமார். வைகாசி பொறந்தாச்சு படத்தில் 'டீன் ஏஜ்' ஆக அறிமுகமானாலும், கமல் நடித்த மங்கம்மா சபதம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதுதான் இவரது சினிமாவுக்காக விசிட்டிங் கார்டாக அமைந்தது. தினமலர் சண்டே ஸ்பெஷலுக்காக அவர் பேசுகிறார்... * கைவசம் உள்ள படங்கள்...சடையா என்ற படத்தில் 5 வில்லன்களில் ஒருவனாக நடிக்கிறேன். எனக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு ஒரு படம். அடுத்த மாதம் ரிலீஸ். பிரியமுடன் ப்ரியானு ஒரு படம், பீட்டர், சண்டிமுனி என படங்கள் ஆண்டவன் புண்ணியத்துல போயிட்டு இருக்கு.
* சில ஆண்டுகளாக சினிமாவிலேயே பார்க்க முடியவில்லையே?ரெண்டு ஆண்டுகள் ஒதுங்கிஇருந்தேன். ஏன்னா, எங்கம்மா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டாங்க. 2 மாதம்தான் உயிரோடு இருப்பாங்கனு டாக்டர் சொல்லிட்டாங்க. இதை அவுங்ககிட்டே சொன்னா ஒரு மாதத்திலே இறந்துடுவாங்கனு பயமுறுத்திட்டாங்க. 'சாதாரண கட்டிதான். சரியாயிடும்'னு அம்மாகிட்டேயே நடித்தேன். அவுங்க துாங்கின பிறகு அழுவேன். எனக்கு திருமணமான 4வது நாளில் இறந்துட்டாங்க. 2 ஆண்டுகள் விரக்தியிலேயே கழிஞ்சது. இதனாலேயே படங்களில் நடிப்பதில் இடைவெளி ஏற்பட்டது. பிறகு எனக்கு மகள் பிறக்க, என் அம்மாதான் பிறந்திருக்காங்கனு நினைச்சு மீண்டும் நடிக்க ஆரம்பித்தேன்.

* எந்த பின்புலமும் இல்லாமல் சினிமா துறைக்கு எப்படி வந்தீங்க?வறுமைதான். பொருளாதார சூழ்நிலை காரணமாக சின்ன வயசிலேயே என்னை அம்மா நடிக்க அனுப்பிச்சாங்க. முந்தனை முடிச்சு படத்தில் நடிக்க வேண்டியது. சரியாக நடிக்கவில்லை என்றால் அடித்துவிடுவார்களோ என பயந்து அந்த வாய்ப்பை மறுத்தேன். ஒருவழியா என்னை 'தேத்தி' மங்கம்மா சபதத்தில் நடிக்க வச்சாங்க.
'டீன் ஏஜ்'ஜில் ரொம்ப குண்டாக இருப்பேன். அதனாலேயே 'வைகாசி பொறந்தாச்சு' படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு பல படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தேன். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவாவிடம் சேர்ந்து ஆடினேன். அவர் 'குட்' என பாராட்டியது எனக்கு கிடைத்த பெரிய பாக்கியம்.
அப்போது எல்லாம் சம்பளம் 5 ஆயிரம் ரூபாய்தான் கிடைத்தது. வைகாசி பொறந்தாச்சு படத்தில் நடித்ததற்கு 1,750 ரூபாய்தான் சம்பளம். ஆனா... இன்று நிலைமை மாறியிருக்கிறது.
* சான்ஸ் கிடைப்பதற்காக உடல் மெலிந்தீர்களா?அம்மாவுக்கு உடல்நலம் பாதித்ததால் அந்த சோகத்திலேயே உடல் மெலிந்துவிட்டது. அம்மாவிடம் நடித்ததால் என்னவோ, இன்று எல்லாவித கேரக்டர்களிலும் என்னால் நடிக்க முடிகிறது.
* வயது...சொன்னா 'கிக்' போய்விடும். கவுண்டமணி சொன்னமாதிரி நடிகனுக்கு 35 வயதிற்கு மேல் போகக்கூடாது என கண் சிமிட்டி சிரிக்கிறார் ரவிக்குமார்.இவரை பாராட்ட 98400 92847

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X