கிடாரி, அசுரவதம் உள்ளிட்ட திரைப்படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களில் நடித்தவர். சமூகப்பணிகளிலும், எழுத்து ஆர்வத்திலும் தன்னை இணைத்துக் கொண்டவர். எழுத்தாளர், நடிகர் வசுமித்ரன் மனம் திறந்த போது...
* உங்களை பற்றி...?சொந்த ஊர் தேனி மாவட்டம் போடிநாயக்கனுார். இயற்பெயர் வடிவேல் முருகன். சாதாரண குடும்பத்தில் பிறந்தேன். எழுத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னை புறப்பட்டேன். பல புத்தகங்கள் எழுதி உள்ளேன். தற்போது திரைப்படங்களில் நடிக்கிறேன்.
* வசுமித்ரன் பெயர் காரணம்...?வசுமித்ரன் என்றால் திசைகளின் நண்பன் என்று அர்த்தம். தமிழ் ஆர்வத்தின் மிகுதியால் இந்த பெயர் வைத்துள்ளேன்.
* கிடாரி திரைப்படத்தில் இரண்டாவது இடத்தில் இருந்து முதலிடம் பிடிக்க துடிக்கும் மகனாக நடித்திருந்தீர்கள்...? அப்போது நடிப்பில் ஏற்பட்ட சவால் எப்படி இருந்தது...?இயலாமை, தாழ்வு மனப்பான்மை கொண்ட மகனாக அந்த கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. இயக்குனர் உதவியோடு நுணுக்கமான முகபாவனைகளை பின்பற்றினேன். அந்த நடிப்பை பலரும் பாராட்டினார்கள்.
* நீங்கள் எழுதிய புத்தகங்கள் பற்றி...?ஆகவே நீங்கள் என்னை கொலை செய்வதற்கு காரணங்கள் உள்ளன, கள்ளக்காதல், மித்ரா நீயல்லாத வானம் எனக்கு ஒரு கரும்புள்ளி, தடைசெய்யப்பட்ட புத்தகம் ஆகிய புத்தகங்கள் எழுதி உள்ளேன். தற்போது புத்தனின் மதுக்குடுவை எனும் புத்தகத்தை எழுதி வருகிறேன். * அசுரவதம் படத்தில் வில்லனாக நடித்த அனுபவம்.இரண்டாவது படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு , மிகவும் கடினமான கதாபாத்திரம் என்றாலும் ஏற்று நடிக்க ஆரம்பித்தேன். முதல் 'ஷாட்டில்' என் நடிப்பை பார்த்த இயக்குனர் மருதுபாண்டியன் என் மீது நம்பிக்கை வைத்தார்.
* சசிக்குமாருடன் பணியாற்றிய அனுபவம்இனிமையான நண்பர். குழந்தை மனம் கொண்டவர்.
* நடிப்பா... எழுத்தா... என்றால் எது வேண்டுமென கூறுவீர்கள்..?எப்பவும் எழுத்துதான் எனக்கு முக்கியம். நடிப்பு என் கூடுதல் பணி. சொல்வதை உள் வாங்கி கொள்வதுதான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும். அந்த வகையில் நான் எழுதுபவன். உள்வாங்கும் திறன் அதிகம் கொண்டவன். ஆகவே நடிப்பு பணி சிரமமின்றி செல்கிறது.
* புத்தக வாசிப்பை மேம்படுத்த இளைஞர்களுக்கு கூறும் அறிவுரைபொழுதை போக்காமல், பொழுதை ஆக்க வேண்டும் என்பதே நான் இளைய சமுதாயத்திற்கு சொல்லும் அறிவுரை.
* அடுத்தது என்ன...?நிறைய பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இலக்கிய படைப்பையும் எழுதி வருகிறேன்.இவரை பாராட்ட makalneya@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE