நினைத்தாலே நெஞ்சுக்குள் தித்திக்கும் தள்ளாட்டம்... பேரழகு கடலில் போகும் அழகிய வெள்ளோட்டம்... முகமெல்லாம் மலர்ந்தாடும் முழுமதியின் முன்னோட்டம், மீண்டும் திரையில் காணத்தானே கண்களுக்குள் இத்தனை போராட்டம்... என ரசிகர்களை ஏங்கவிட்டு துாங்கவிடாமல் செய்த மனம் மயக்கும் மும்தாஜ் மனம் திறக்கிறார்...
* சினிமாவில் இடைவெளி தொடர்கிறதே ஏன் ?எனக்கு பிடித்த மாதிரி கேரக்டர் கிடைக்கலை... சும்மா பெயருக்கு நடிக்க விருப்பம் இல்லை. பணம் பெரிய விஷயம் இல்லை. எத்தனையோ படங்களில் இலவசமாக நடிச்சிருக்கேன். நடிக்கும் கேரக்டர் எனக்கு திருப்தியை தரணும். அதனால் தான் சினிமாவில் இடைவெளி தொடர்கிறது.
* நீங்கள் விரும்பும் கேரக்டர் தான் என்ன ?எந்த கேரக்டரில் நடித்தாலும் பாராட்டுற ஆட்களும் இருக்காங்க, குறை சொல்லும் ஆட்களும் இருக்காங்க. பலவிதமான கேரக்டர்களில் நடிச்சுட்டேன். பாலிவுட்டில் நடிகைகளை மையமாக கொண்ட சினிமாக்கள் நிறைய வருகின்றன. ஆனால், கோலிவுட்டில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகள் குறைவு. எத்தனை படங்களில் தான் ஆடி, பாடி நடிப்பது வித்தியாசம் வேண்டாமா...
* பிக் பாஸ் ரியாலிட்டி ஷோவுக்கு வந்தது ?பொது இடங்களுக்கு போகும் போது 'சினிமாவில் உங்களை பார்க்கவே முடியலயே' என, நிறைய ரசிகர்கள் கேட்டனர். ரசிகர்களுக்காகவும், என் ரியல் கேரக்டரை வெளிப்படுத்தவும் தான் தான் பிக் பாஸ் வந்தேன்.
* உங்களுக்கு கிடைத்த புதிய திரையுலக நண்பர்கள் ?பிக் பாஸ் வீட்டில் நான் 91 நாட்கள் இருந்தேன், அன்றைய நாட்களில் ஜனனி, ரம்யா, மமதி என் மனதை புரிந்து பழகி நல்ல நண்பர்களாகினர்.
* நிகழ்ச்சியில் கமலிடம் கற்றுக் கொண்டது ?நிகழ்ச்சியில் நிறைய பேர் அவரிடம் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டனர். நான் அவரை ரசித்துக்கொண்டே இருந்தேன்; அவ்வளவு தான்.
* தேர்தல் நேரம் அரசியல் அறிவிப்பு ஏதாவது ?உண்மையாக இருக்க நினைக்கும் என்னால் அரசியலுக்கு எப்படி வர முடியும். ஆனாலும், சிலர் அரசியலில் உண்மையாக இருக்கத் தான் செய்கிறார்கள். எனக்கு அரசியல் ஆசை இல்லை.
* இன்றைய தமிழ் சினிமா எப்படி இருக்கிறது ?ஒரு நடிகை கிளாமராக நடித்தால் அடுத்தடுத்து கிளாமராக தான் நடிக்க கேட்கிறார்கள். வில்லியாக நடித்தால் தொடர்ந்து வில்லியாக தான் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஒரே மாதிரி கதைகள் தான் இன்றும் ஓடிக் கொண்டிருக்கின்றன.
* பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறை?இதெல்லாம் காலம் காலமாக நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்று வன்முறைகள் அதிகம் நடப்பதால் சமூக ஊடகங்கள் மூலம் வெளியே தெரிகிறது. வன்முறைகளில் ஈடுபடுவோரை தண்டிக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும்.parkerassociates@gmail.com
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE