காங்.,கின் 'நியாய்' திட்டம் சாத்தியம் இல்லை: கோயல்

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (24)
Advertisement

புதுடில்லி: ஏழைகளுக்கு ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என்ற காங்கிரசின் 'நியாய்' திட்டம் சாத்தியம் இல்லாதது என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.






இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: பொருளாதாரம் மற்றும் நிதி திட்டங்கள் ரீதியாகவும், காங்கிரசின் 'நியாய்' திட்டம் பேரழிவு திட்டம். மக்களின் சம்பளம் மற்றும் வருமான அளவு குறித்த விவரம் ஏதும் இல்லாததால் இந்த திட்டம் சாத்தியம் இல்லாதது. பலூன் போல், இந்த அறிவிப்பு வெடித்துவிடும்.
பயனாளிகள் தேர்வில் முறைகேடு நடக்கும். அக்கட்சியில் பிரபலமான ஊழல் பட்டியலில் புதிதாக ஒன்று சேரும். வெற்று கோஷங்கள் மூலம் மக்களை முட்டாள் ஆக்க முடியும் என்ற பழைய மனநிலையிலேயே காங்கிரஸ் உள்ளது. ஆனால், கவர்ச்சிகரமான கோஷங்கள் மூலம் மக்களை ஏமாற்ற முடியாது என்பதை அக்கட்சி புரிந்து கொள்ள வேண்டும். அக்கட்சி தலைவர்கள் 3 தலைமுறைகளாக பெரிய வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றினர். ஆனால், ஊழலில் ஈடுபட்டதுடன், உறுதியில் சராசரிக்கும் கீழேயே நிறைவேற்றினர். இந்திய மக்கள் புத்திசாலிகள். இனியும், பொய் வாக்குறுதிகளை கண்டு ஏமாறமாட்டார்கள். குறிப்பாக வெற்று கோஷம், பெரிய வாக்குறுதிகளை நம்பமாட்டார்கள்.





நாட்டின் வளர்ச்சிக்காக மோடி அரசு பாடுபட்டதுடன், 130 கோடி மக்களும், சுயமாகவும், கவுரமாகவும் வாழவும் சிறந்த எதிர்காலத்திற்காகவும் உழைத்துள்ளோம். எங்களை பொறுத்தவரை அனைவரும் உயரத்திற்கு செல்ல வேண்டும் என விரும்புகிறோம். ஆனால், காங்கிரஸ் அனைவரும் கீழே செல்ல வேண்டும் என கருதுகிறது.
இந்தியா தற்போது வேகமாக வளரும் நாடு. உலகில் 5வது பெரிய பொருளாதார நாடு. இது வேலைவாய்ப்புகளை உருவாக்காமல் சாத்தியம் ஏதும் இல்லை. அடுத்த 5 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் ரூ.100 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும் என உறுதி அளித்துள்ளோம். இதன் மூலம், நேரடியாகவும், மறைமுகமாகவும் இன்னும் வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் கூறினார்.




Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Needhiyin Pakkam Nil - Chennai,இந்தியா
15-ஏப்-201911:20:40 IST Report Abuse
Needhiyin Pakkam Nil பொதுவாகவே பணம் சம்பாதிக்க வழி செய்யாமல் கொஞ்சம் பணத்தை கொடுத்து ஏழை மக்களை சிந்திக்க விடாமல் சோத்துக்கு செத்த அடிமைகளாக ஏழை மக்களை வைத்திருக்க நினைப்பதை நான் ஆதரிப்பதில்லை, நீங்கள் 5 ஆண்டுகளில் செலவிட போகும் தொகையை ஒரு சிறந்த அறிவுள்ளவனிடம் கொடுத்தீர்கள் என்றால் அவன் வழி செய்வான் நீங்கள் பணம் கொடுக்க போவதாக சொல்லும் ஏழைகளுக்கு பணம் சம்பாதிப்பது எப்படி என்று ...................
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201911:15:36 IST Report Abuse
ஆப்பு நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். கஜானாவை சுத்தமா துடைச்சு வெச்சுட்டு போயிருவீங்களே....
Rate this:
Share this comment
Cancel
Prabu.KTK - Coimbatore,இந்தியா
15-ஏப்-201910:22:50 IST Report Abuse
Prabu.KTK சபாஷ், மிகச்சரியான கருத்து இந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு , ஹிந்து விரோத , தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர் தமிழ் ஹிந்து கடவுள்களை அவமானப் படுத்திய திமுகா, தி க , போன்ற தேச , ஹிந்து விரோத சக்திகள் அழியட்டும் மற்ற எல்லா பண்டிகைக்கும் ( கிறிஸ்துமஸ் , மிலாடி நபி )வாழ்த்து சொல்லும் சுடலை ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டாராம் இளைஞர்களே சிந்திப்பீர் மோடிக்கு தாமரை , இரட்டை இலை சின்னத்தில் வாக்கு அளிப்பீர் ஜெய் ஹிந்த் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X