பொது செய்தி

இந்தியா

விழிப்புணர்வு பிரசாரம் செய்த டிராவிட்டுக்கே ஓட்டு இல்லை

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (9)
Advertisement

பெங்களூரு: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டு மீண்டும் சேர்க்கப்படாததால், கர்நாடகா தேர்தல் கமிஷனின் தூதர், ராகுல் டிராவிட், லோக்சபா தேர்தலில் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.






லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 18ம் தேதி(ஏப்.,18) இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரரான ராகுல் டிராவிட், கர்நாடக தேர்தல் கமிஷனின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மக்களிடம் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, அவர் விழிப்புணர்வு பிரசாரமும் மேற்கொண்டார். இந்நிலையில், அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.





பெங்களூரு இந்திரா நகரில் வசித்து வந்த டிராவிட், தற்போது அஷ்வந்த் நகருக்கு குடிபெயர்ந்துள்ளார். இதனையடுத்து சாந்திநகர் சட்டசபை தொகுதியிலிருந்த தனது ஓட்டை நீக்க, பெயர் நீக்க படிவமான 'பார்ம் 7' அளித்துள்ளார். இதனால் டிராவிட் மற்றும் அவரது மனைவி விஜேதாவின் பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது. ஆனால் மீண்டும் பெயர் சேர்ப்பதற்கான 'பார்ம் 6'ஐ அளிக்க டிராவிட் தவறியுள்ளார். இதனால் வரும் லோக்சபா தேர்தலில் அவரால் ஓட்டு போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.





இதுகுறித்து தெரிவித்துள்ள கர்நாடக தேர்தல் அதிகாரி, 'டிராவிட் ஓட்டு போட முடியாது என்ற செய்தி எங்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
17-ஏப்-201906:05:23 IST Report Abuse
meenakshisundaram இது நடை முறை தவறு கூட இல்லை .திராவிட செய்ய மறந்ததுவே. ஓரிடத்தில் ரேஷன் கார்டு சரணடைய செய்பவர்கள் சான்றிதழ் பெற்று வேறிடத்திலே காட்டி வேறு ரேஷன் கார்டு பெற வில்லையா? படிக்காதவர்கள் செய்யும் தவறை அவர் செய்த்துள்ளார்.அவ்வளவே .இதன் மூலம் அவர் வாக்கு போட வேண்டும் என்று கோரிக்கை விடுவதில் தவறு காண்பதுதான் தவறு. தொடரட்டும் அவர் சேவை .
Rate this:
Share this comment
Cancel
DSM .S/o PLM - கவுண்டர் குடும்பம் ,கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா
15-ஏப்-201912:00:28 IST Report Abuse
DSM .S/o PLM இந்த மாதிரி வாக்காளர் தொகுதி மாற்றம், இடமாற்றம் ஆகியவை டிஜிட்டல் முறையில் செய்யப்பட வேண்டும். இந்த விஷயத்தில் நடக்கும் தாமதம் மெத்தனம் இவற்றினால் மொத்த வாக்குகளில் ஐந்து முதல் எட்டு சதவிகிதம் வாக்குகள் பதிவாவதில்லை.. அதேபோல வெளியூரில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு அவர்களது சொந்த ஊரின் தேர்தல் நாளன்று விடுமுறை கிடைக்காது. நான் உத்திரகாண்டில் பணிபுரிகிறேன் இங்கே ஏப்ரல் பதினொன்று தேர்தல் நாள், எனது வாக்கு ஈரோட்டில்... கண்டிப்பாக நான் பணி புரியும் நிறுவனம் எனக்கு ஏப்ரல் 18 அன்று விடுமுறை கொடுக்க போவதில்லை. அப்படியே கொடுத்தாலும் நானும் எனது மனைவியும் ஒரே நாளில் சொந்த ஊர் சென்று வாக்களித்து திரும்பி வர மூன்று நாட்களாகும். அதுவும் விமான பயணம் செய்தால் தான் சாத்தியம். ஹரிதுவாரில் இருந்து டேராடூன் வரை சாலை பயணம். டேராடூன் -டெல்லி - கோவை விமான பயணம். கோவை - ஈரோடு பேருந்து பயணம். , இதற்கான செலவு. திரும்ப வர இதே வழிமுறை. செலவு முப்பதாயிரம் ஆகும். இதையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் கமிசன் வரும் காலங்களில் டிஜிட்டல் முறை வாக்களிப்பு வசதியை ஏற்படுத்தி தரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
15-ஏப்-201910:32:08 IST Report Abuse
Subburamu Krishnaswamy இது டிராவிட் அவர்களின் தவறுதான் அவர் Form 6 கொடுத்திருக்க வேண்டும். மேலும் அவரிடமிருக்குது FORM 7 வாங்கியவர் FORM 6 கொடுக்க சொல்லியிருக்கலாம். தேர்தல் ஆணைய நடைமுறைகள் எளிதாக இல்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X