குடும்ப அரசியல் வேண்டாம்: பா.ஜ., மத்திய அமைச்சர் ராஜினாமா

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (24)
Advertisement

சண்டிகர்: ஹரியாவை சேர்ந்த பா.ஜ., அமைச்சர், குடும்ப அரசியல் வேண்டாம் எனக்கூறி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.


மத்திய இரும்பு, எஃகு துறை அமைச்சராக பா.ஜ.,வின் சவுத்ரி பிரேந்தர் சிங்(73) உள்ளார். ஹரியானாவை சேர்ந்த இவர், தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால், குடும்ப அரசியல் வேண்டாம் எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.


இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் எனது மகன் பிரிஜேந்திர சிங்குக்கு, ஹிசார் தொகுதியில்(ஹரியானா) போட்டியிட, பா.ஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவன் நான். எனவே எனது மத்திய அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனது நிலைப்பாட்டை பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
16-ஏப்-201915:50:22 IST Report Abuse
Ramamoorthy P அரசியலை சேவையாக கருத்துபவருக்கு மட்டுமே இது போன்ற தகுதிகள் இருக்கும். அரசியலை பிழைப்பாக கொண்டவர்களுக்கு ????
Rate this:
Share this comment
Cancel
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-ஏப்-201918:12:36 IST Report Abuse
Ramamoorthy P தமிழக வாரிசு அரசியல் வியாதி இவர் காலில் வீழ்ந்து வணங்கினாலும் புத்தி வருமா ?
Rate this:
Share this comment
Cancel
Makkalukkaga - India,இந்தியா
15-ஏப்-201910:20:31 IST Report Abuse
Makkalukkaga தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட மறுகணமே எந்த அமைச்சருக்கும் எந்த அதிகாரமும் இல்லாமல் போய் விடுகிறது. சொல்ல போனால் இது காபந்து அரசு தான். இதில் ராஜினாமா செய்தால் என்ன செய்யாவிட்டால் என்ன.
Rate this:
Share this comment
partha - chennai,இந்தியா
15-ஏப்-201915:54:37 IST Report Abuse
parthaமீதமுள்ள 2 அல்லது 3 வருட ராஜ்யசபா பதவியையும் சேர்த்துதான் ராஜினாமா செய்த்துள்ளார் அதெல்லாம் உமது மதவெறி கண்களுக்கு புலப்படாதது ஆச்சரியம் ஒன்றும் இல்லை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X