குடும்ப அரசியல் வேண்டாம்: பா.ஜ., மத்திய அமைச்சர் ராஜினாமா| Dinamalar

குடும்ப அரசியல் வேண்டாம்: பா.ஜ., மத்திய அமைச்சர் ராஜினாமா

Updated : ஏப் 14, 2019 | Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (24)

சண்டிகர்: ஹரியாவை சேர்ந்த பா.ஜ., அமைச்சர், குடும்ப அரசியல் வேண்டாம் எனக்கூறி தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.






மத்திய இரும்பு, எஃகு துறை அமைச்சராக பா.ஜ.,வின் சவுத்ரி பிரேந்தர் சிங்(73) உள்ளார். ஹரியானாவை சேர்ந்த இவர், தனது மகனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டதால், குடும்ப அரசியல் வேண்டாம் எனக் கூறி தனது பதவியை ராஜினாமா செய்தார்.





இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலில் எனது மகன் பிரிஜேந்திர சிங்குக்கு, ஹிசார் தொகுதியில்(ஹரியானா) போட்டியிட, பா.ஜ., வாய்ப்பு வழங்கியுள்ளது. குடும்ப அரசியலுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவன் நான். எனவே எனது மத்திய அமைச்சர் பதவியையும், ராஜ்யசபா எம்.பி., பதவியையும் ராஜினாமா செய்கிறேன். எனது நிலைப்பாட்டை பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷாவுக்கு தெரிவித்துள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X