சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவிக்கு பாலியல் மிரட்டல் : இருவர் கைது

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 மாணவி, பாலியல், மிரட்டல் ,கைது ,போட்டோ ,சென்னை

சென்னை : சென்னையில் மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த இருவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். இவருடன் பள்ளியில் ஒன்றாக படித்ததாக கூறி ஸ்ரீநாத் என்ற கல்லூரி மாணவர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியிடம் பழகியுள்ளார். நண்பர்களாக பழகி வந்த நிலையில் மாணவியை காதலிப்பதாகக் கூறி தொந்தரவு செய்துள்ளார். தன்னை காதலிக்கவில்லை என்றால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என மிரட்டியிருக்கிறார்.

ஒருநாள், நண்பர்களின் விருந்து எனக்கூறி மாணவியை விடுதிக்கு அழைத்துச் சென்றுள்ளான். பிறகு தனியறையில் மாணவியிடம் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனை அவன் நண்பன் லோகேஷ் போட்டோ எடுத்துள்ளான். இதனை வைத்து மாணவியை மிரட்டி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். மறுத்தால் இன்ஸ்டாகிராமில் பதிவிடுவேன் எனவும் மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த செய்தி மாணவியின் பெற்றோருக்கு தெரியவே , மடிப்பாக்கம் மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இருவரையும் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்று சென்னையிலும் கல்லூரி மாணவியை செல்போனில் ஆபாச படமெடுத்து மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்தது அதிர்ச்சியை அளிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayanantham - tamilnaadu ,இந்தியா
15-ஏப்-201900:45:47 IST Report Abuse
jayanantham விடுதிக்கு ஏன் இந்தப் பெண் அவன் கூப்பிட்டான் என்று செல்ல வேண்டும். எவ்வளவோ பார்த்தும் அதன் பிறகும் இந்தப் பெண் சென்றாள் என்றால் இப்படிப் பட்ட பெண்கள் அலைச்சல் கேசுகள்தான்.
Rate this:
Share this comment
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-ஏப்-201904:54:53 IST Report Abuse
 nicolethomsonஅது விடுதியா இல்லை உன்னை போன்றவர்களின் அறையா? யாருக்கு தெரியும் அங்கே நடந்தது?...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
21-ஏப்-201914:01:13 IST Report Abuse
Nallavan Nallavan@ஜெயானந்தம் ...... வளர்ப்பு சரியில்ல -ன்னு சொல்லுங்க ..... அதை விட்டுட்டு ...... நம்ம குடும்பத்துப் பொண்ணு இல்லன்னா, எப்படி வேணும்னாலும் எழுதிருவீங்களா ?? @ தாம்சன் ..... நீங்களும் அப்படி எழுதியிருக்கக் கூடாது .........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X