மாயாபுரி வன்முறை : ஹர்தீப் சிங் குற்றச்சாட்டு

Added : ஏப் 14, 2019
Advertisement
 மாயாபுரி , புதுடில்லி ,வன்முறை, ஹர்தீப் சிங் , குற்றச்சாட்டு

புதுடில்லி : டில்லி மாயாபுரியில் வன்முறை வெடித்ததற்கு கெஜ்ரிவால் அரசின் தோல்வியே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேற்கு டில்லி பகுதி மாயாபுரியில் உள்ள பழைய பொருட்கள் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள், டில்லி மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் போலீசார் அகற்ற முயன்றபோது, வியாபாரிகள் அவர்கள் மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்தினர். இதில் துணை கமிஷனர் உட்பட 14 பேர் காயமடைந்தனர்.

இந்த வன்முறைக்கு முதல்வர் கெஜ்ரிவால் திறம்பட செயல்படாததே காரணம் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் குற்றஞ்சாட்டினார். மேலும் அவர் கூறுகையில், கடந்த 2015ம் ஆண்டே அந்த கடைகளை வேறு இடத்துக்கு மாற்ற தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருந்தும், கெஜ்ரிவால் அரசு செய்ய தவறிவிட்டார். இதில் மத்திய அரசுக்கோ, மாநகராட்சிகளுக்கோ தொடர்பில்லை. மக்களின் பிரச்னையாக இருக்கும் காற்று மாசுக்கு பொறுப்பேற்று, கெஜ்ரிவால் மறுவாழ்வுக்கான வழிகளை கண்டறிந்து தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் தெரிவிக்க வேண்டும் எனக் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X