அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரெய்டு'க்கு நான் காரணமா? பொங்குகிறார் பொன்.ராதா

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement

நாகர்கோவில் : ''காங்கிரஸ் கட்சி போன்று, கீழ்த்தரமான அரசியலை நான் செய்ய மாட்டேன்,'' என, மத்திய இணை அமைச்சர், பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.நாகர்கோவிலில் நேற்று அவர் அளித்த பேட்டி:காங்கிரஸ் வேட்பாளர், வசந்தகுமார் உறவினரிடம் நடந்த, வருமான வரி சோதனைக்கு, நான் தான் காரணம் என கூறியிருப்பதாக அறிந்தேன். அவர்களை போல் நான், கீழ்த்தரமான அரசியல் செய்ய மாட்டேன்.உப்பை தின்றவன், தண்ணீர் குடித்தாக வேண்டும் என்ற பழமொழி உள்ளது. அதேபோல், தவறு செய்தவர்கள், அதற்கான பலனை அனுபவிக்க வேண்டும்.

காங்கிரஸ் வேட்பாளர்வசந்தகுமார், பணத்தால் சாதிக்க முடியும் என நினைக்கிறார். டோக்கன் கொடுத்து, 'நெல்லையில் சென்று பொருட்கள் வாங்கி கொள்ளலாம்' என கூறியுள்ளனர். தங்களது நிறுவனத்தில் பொருட்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு, பொருட்களுடன் பணமும் கொடுத்து, ஓட்டுகளை சேகரிக்கின்றனர்.இது போன்ற தகவல்கள், எனக்கு வந்து கொண்டு இருக்கின்றன. கன்னியாகுமரியில் இதுவரை, இது போன்ற ஒரு மோசமான நிலை வந்தது இல்லை. வசந்தகுமார், கன்னியாகுமரியில் ஒரு மோசமான நிலையை ஏற்படுத்தி உள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sanny - sydney,ஆஸ்திரேலியா
15-ஏப்-201910:37:19 IST Report Abuse
Sanny இவரின் மறுப்பு அறிக்கையே சொல்லுதே இவர்தான் காட்டிக்கொடுத்தார் என்று.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201908:37:12 IST Report Abuse
Srinivasan Kannaiya உண்மைதான் பொன்னார் நல்ல நாளிலேயே நாயகன்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:39:27 IST Report Abuse
Bhaskaran வேட்பாளர்கள் வெற்றிபெற்று தொகுதிப்பக்கமே வருவதில்லை எனவே இப்போதே அவர்களிடம் கிடைத்ததை வாங்கிக்கொள்வோம் என்றமுடிவில் வாக்காளர்கள் இருக்கின்றனர் இதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X