பொது செய்தி

தமிழ்நாடு

கல்வி அதிகாரி வீட்டில் அதிகாரிகள் சோதனை

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 கல்வி அதிகாரி வீட்டில் அதிகாரிகள் சோதனை

ஓசூர் : அஞ்செட்டி அருகே, வட்டார கல்வித்துறை அதிகாரி வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த வண்ணாத்திப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுதாகர், 43. இவர், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில், வட்டார கல்வி அலுவலராக பணிபுரிந்து வருகிறார். அஞ்செட்டி ராமர் கோவில் பகுதியில், குறிஞ்சி மலர் என்ற ஆங்கில துவக்கப்பள்ளி, குறிஞ்சி டவர் என்ற பெயரில், வணிக வளாகம் மற்றும் தங்கும் விடுதி நடத்தி வருகிறார்.

இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக, ஓசூர் வருமான வரித்துறை அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் சென்றன. கோடிக்கணக்கில் வட்டிக்கு விட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.இதையடுத்து, ஓசூர், வருமான வரித்துறை உதவி ஆணையர், சாய்ராஜ் தலைமையில், ஆறு பேர் குழுவினர், நேற்று மதியம் முதல் இரவு வரை, வண்ணாத்திப் பட்டியில் உள்ள சுதாகர் வீடு, வணிக வளாகம், தங்கும் விடுதி, துவக்கப்பள்ளி ஆகியவற்றில் சோதனை செய்தனர்.அப்போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. வட்டார கல்வி அலுவலர் சுதாகரை, இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டு சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
17-ஏப்-201905:01:30 IST Report Abuse
 nicolethomson இந்த செய்திக்கும் சில பத்திரிக்கைகள் அரசியல் சாயம் பூசி இந்த சோதகரை நல்லவன் ஆகும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது வேதனை தருது தமிழர்கள் இப்போதான் முழிக்க போறாங்களோ , இப்போதான் திருடர்கள் முன்னேற்ற கட்சிக்கு என்று காலிடப்பாவை கொடுக்க போறாங்களோ
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201908:41:30 IST Report Abuse
Srinivasan Kannaiya சுதாகர் தேர்தல் நிதி தரவில்லையா
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:13:52 IST Report Abuse
Bhaskaran வட்டித்தொழிலை பிரதானமாகவும் வாத்தியார் வேலையை உபதொழிலாகவும் செய்யும் ஆசிரிய பெருமக்கள் தங்கள் ஒழுங்கீனம் மறைக்க ஒரேபள்ளியில் பல ஆண்டுகளாக பணிபுரிய போன்ற அல்ப காரணங்களுக்காக இவருக்கு கப்பம் கட்டிய சிறு தொகையை வட்டிக்கு விட்டு பெருக்கியிருக்கிறார் இந்த அதிகாரி அவ்வளவுதான் மேலதிகாரிகளை கவனிக்காததுதான் இந்த நடவடிக்கைக்கு காரணமாக இருக்கும் வாழ்க ஜாக்டோ ஜியோ
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X