நானே அப்பிராணி: சொல்கிறார் ராஜு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நானே அப்பிராணி: சொல்கிறார் ராஜு

Added : ஏப் 14, 2019

மதுரை : ''நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம். நானே அப்பிராணியாக இருக்கிறேன்,'' என, மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜு கூறினார்.அ.தி.மு.க., சார்பில் தமிழ் புத்தாண்டையொட்டி நடந்த பேரணியை, அமைச்சர் ராஜு துவக்கி வைத்தார். 'ஓட்டு போட, அ.தி.மு.க., பணம் பட்டுவாடா செய்வதாக, குற்றம் சாட்டப்படுகிறதே...' என்ற கேள்விக்கு, அவர் கூறியதாவது:நாங்கள் எதற்கு பணம் பட்டுவாடா செய்யப் போகிறோம்? நானே அப்பிராணி. வேண்டும் என்றால் என் வீட்டையும், வாகனத்தையும் சோதனை செய்யுங்கள்.

நான் ஒரு சாதாரண தொண்டனாக, அ.தி.மு.க.,வில் பணிபுரிந்து வருகிறேன். தற்போது, இத்தொகுதி வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்கிறேன்.தமிழ் வளர்ச்சிக்காக, தி.மு.க., எதுவும் செய்யவில்லை. உலக தமிழ் சங்க வளாகத்தில், தமிழன்னை சிலை நிறுவப்படும். நான்கு சட்டசபை தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்தது ஆரம்பம் தான். ஆரம்பம் முக்கியமல்ல; முடிவு தான் முக்கியம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X