சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (14)
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சை அருகே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ், 75. இவர், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றவர்.இவர், பா.ஜ., மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். இதனால், லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

பார்ப்பவர்களை எல்லாம், 'மோடிக்கு ஓட்டு போடுங்கள்' என,சொல்வாராம்.ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே, நேற்று முன்தினம் இரவு, மோடியின் படத்தை கழுத்தில் போட்டு, கோவிந்தராஜ் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது, அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த கோபிநாத், 33, என்ற டிரைவர், 'எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாய்' எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மயங்கி விழுந்த கோவிந்தராஜ், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார்கோவிந்தராஜ் மகள் புகாரின்படி, ஒரத்தநாடு போலீசார், கோபிநாத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sadasivan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஏப்-201919:17:05 IST Report Abuse
sadasivan தேர்தல் ஆணையம் மன்னிப்பு கேட்க வேண்டும். தேர்தல் ஆணையம் தானாக கொலையாளிக்கு எதிராக வழக்கு பதிந்து தண்டனை வாங்கித் தர வேண்டும். தேர்தலை வன்முறை இல்லாமல் நடத்த முடியாது என்றால்... தேர்தல் ஆணையம் எதற்கு தேர்தலை நடத்த வேண்டும்? ஓட்டு கேட்டவரை கொல்லும் நிலைக்கு தூண்டிய திமுக வை ஏன் தேர்தல் ஆணையம் அங்கீகாரத்தை ரத்து செய்யக் கூடாது?
Rate this:
Share this comment
Cancel
Adhvikaa Adhvikaa - chennai,இந்தியா
15-ஏப்-201915:14:11 IST Report Abuse
Adhvikaa Adhvikaa திமுக எப்போதுமே ரவுடிக் கட்சி தான். எம் ஜி ஆர் மீதே ஆசிட் வீச காஞ்சிபுரத்தில் ரவுடிகளை ஏவியவர்கள். அவர்கள் திருந்தவே மாட்டார்கள். இந்த தேர்தலில் மக்கள் தான் திமுகவை ஒழித்துக் கட்டவேண்டும்.
Rate this:
Share this comment
Srinivas - Chennai,இந்தியா
15-ஏப்-201919:54:04 IST Report Abuse
Srinivas...
Rate this:
Share this comment
Cancel
sripa - muscat,ஓமன்
15-ஏப்-201914:05:47 IST Report Abuse
sripa பாவம் அந்த முதியவர். அவரது ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன். இந்த அராஜக செயலை யார்கேட்பது. வெட்ககக்கேடு. திமுக ஆட்சியில் இல்லாத போதே இந்த அராஜகம் என்றால் அவர்கள் ஆட்சியில் இருந்தால் என்ன நடக்கும். தமிழ் நட்டு மக்களே நன்றாக சிந்தித்து வோட்டு போடுவீர். ஜெய் மோடி சர்க்கார்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X