பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : ஏப் 14, 2019
Advertisement
 இதே நாளில் அன்று


ஏப்ரல் 15, 1977

சுதர்சன் பட்நாயக்: ஒடிசா மாநிலம், புரி என்ற ஊரில், ஏழ்மையான குடும்பத்தில், 1977 ஏப்., 15ம் தேதி பிறந்தவர், சுதர்சன் பட்நாயக். ஏழாவது வயதிலேயே, கடற்கரை மணலில், சிற்பங்கள் செதுக்கத் துவங்கினார். புரி கடற்கரையில், 45 மாணவர்களுடன் இணைந்து, ஒன்பது நாட்களில், 48.8 அடியில், இவர் உருவாக்கிய, மணல் கோட்டை சிற்பம், 'கின்னஸ்' உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

சர்வதேச அளவில் நடந்த போட்டிகளில் பங்கேற்று, 27க்கும் மேற்பட்ட, தங்க பதக்கங்கள் குவித்துள்ளார். ஒடிசாவில், சுற்றுலா துறை வளர்ச்சி அடைவதற்கு, இவரின் சிற்பங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. மணல் சிற்ப பயிற்சிக்கூடம் அமைத்து, பலருக்கும் பயிற்சி அளித்து வருகிறார். கடந்த, 2014ல், இந்திய அரசு, அவருக்கு, 'பத்மஸ்ரீ' பட்டம் வழங்கி கவுரவித்தது. இந்தியாவில், மணல் சிற்பக் கலை பிறப்பதற்கும், பிரபலம் அடைவதற்கும், காரணமாக இருந்த, சுதர்சன் பட்நாயக், பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X