வேன் - மொபட் மோதலில் 2 பேர் உயிரிழப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேன் - மொபட் மோதலில் 2 பேர் உயிரிழப்பு

Added : ஏப் 14, 2019

சிதம்பரம் : சிதம்பரம் புறவழிச் சாலையில், மொபட் மீது, டெம்போ டிராவலர் வேன் மோதி, இருவர் இறந்தனர்.கடலுார் மாவட்டம், சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள், சங்கர், 46, பாலசுப்ரமணியன், 57. இருவரும், நேற்று மாலை, 4:00 மணிக்கு, கண்ணங்குடி கிராமம் சென்று, மொபட்டில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். புறவழிச் சாலை சந்திப்பு அருகே, வைத்தீஸ்வரன் கோவிலில் இருந்து, சேலம் நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேன், மொபட் மீது மோதியது. இதில் துாக்கி வீசப்பட்ட இருவரும் இறந்தனர். விபத்து குறித்து, சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X