அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினால் முடியாது: சரத்குமார் திட்டவட்டம்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நாகர்கோவில் : ''எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப் போவதில்லை,'' என, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.கன்னியாகுமரியில் அவர் கூறியதாவது: மோடி தலைமையில், நிலையான ஆட்சி வரவேண்டும் என, மக்கள் விரும்புகின்றனர். ஜெ., இருந்த போதும், அவர் இறந்த பிறகும், அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு அளித்துள்ளேன். நிர்வாகிகளிடம் ஆலோசித்து தான், இந்த முடிவு எடுக்கப்பட்டது.மோடி ஆட்சியில், தமிழகத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது.

எதிர்க்கட்சிகளை குறி வைத்து தான், வருமான வரி சோதனை செய்கிறது என்பது, தவறான குற்றச்சாட்டு. தகவலின்படி, அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். என்வீட்டிலும் சோதனை நடந்துள்ளது.தேர்தலுக்கு பின் ஆட்சி மாற்றம் வரும், முதல்வராகி விடலாம் என, ஸ்டாலின் கனவு காண்கிறார். ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர், எப்படி ஆட்சிக்கு வரமுடியும்? எந்த காலத்திலும், ஸ்டாலின் முதல்வராக வரப்போவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:16:37 IST Report Abuse
Bhaskaran இதே திமுக கூட்டணியில் சேர்த்திருந்தால் பேச்சே வேறுமாதிரியாக இருந்திருக்கும் இவரையெல்லாம் ஓரம் கட்டியது நல்லது தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X