அரசியல் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ., அழிந்து விடும்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நாகர்கோவில் : ''இந்த தேர்தலில், பா.ஜ., வெற்றி பெறவில்லை என்றால், அந்த கட்சி அழிந்து விடும்,'' என, நடிகை குஷ்பு கூறினார்.நாகர்கோவிலில் அவர் அளித்த பேட்டி:மோடி என்ற ஒரு நபரை நம்பியே, பா.ஜ., உள்ளது. 2019 தேர்தலில், பா.ஜ, வெற்றி பெறவில்லை என்றால், அந்த கட்சியின் கதை முடிந்து விடும். அதனால் தான், மத வேறுபாட்டை கொண்டுவர முயற்சிக்கின்றனர். பா.ஜ., ஆட்சியில்,தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு, வேலைகள் கிடைக்கவில்லை.ஜி.எஸ்.டி.,க்கு சில வரன்முறைகள் வேண்டும் என சொன்னோம்.

நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக, அவசரமாக அமல்படுத்தியதால், அதன் பலனை, மக்கள் அனுபவித்து கொண்டிருக்கின்றனர். காங்கிரஸ் என்பது கட்சி அல்ல; அது ஒரு இயக்கம். ஒற்றுமையும், மதச்சார்பின்மையும், வளர்ச்சியும் தான் காங்கிரசின் கொள்கை.மாநிலங்கள் விரும்பாத பட்சத்தில், 'நீட்' தேர்வை திணிக்க வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ரஜினிகாந்த் இன்னும் அரசியலுக்கு வரவில்லை. தனிப்பட்ட முறையில், நதிநீர் இணைப்பு பற்றி பேசியுள்ளார். அது, பா.ஜ., ஆதரவு இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:17:58 IST Report Abuse
Bhaskaran இந்த அம்மாவுக்கு ரஜனியின் மேல் எப்போதும் ஒரு சாப்ட்கோர்னெர் தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X