சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

'டவுட்' தனபாலு

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'டவுட்' தனபாலு

மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன்: பூரண மது விலக்கு கொண்டு வந்தால், மாபியாக்கள், கள்ள மார்க்கெட், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள் உருவாவர். மது விலக்கு சாத்தியமில்லாதது.

டவுட் தனபாலு: 'என்னங்க பேசுறீங்க... தமிழகத்தின், சட்டம் - ஒழுங்கே, 'சரக்கு' விற்பதால் தான், அமைதியா இருக்கா... அதிகாரிகள், போலீசார் மீது, அளவு கடந்த அவநம்பிக்கையில் இருக்கீங்க போல... உங்களால, மதுவிலக்கை கொண்டு வர முடியாதுன்னு சொல்லுங்க... அதை விடுத்து, எதற்கு இப்படி மத்தவங்க மேல பழியைப் போடுறீங்க'ன்னு, யாரும், 'டவுட்' எழுப்பிடப் போறாங்க...!

***

தி.மு.க., தலைவர் ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல் வேலையே, ஊழல்வாதிகள், ஜெ., மரணத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது தான்.

டவுட் தனபாலு: பல்லாண்டு காலம், ஆட்சியில் இருந்த கட்சி, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு பலமான எதிர்க்கட்சி என்ற பெருமையைப் பெற்ற நீங்க, அ.தி.மு.க., அரசின் ஊழல்களுக்கான ஆதாரங்களை, இப்போதே நீதிமன்றத்தில் முன்வைக்கலாமே... அப்புறம், ஜெ., மரணத்தில் உங்களுக்கு, 'டவுட்' இருக்குமானால், விசாரணை கமிஷனில் ஆஜராகி, உங்களுக்கு தெரிந்த விஷயங்களை தெரிவிக்கலாமே... ஆட்சிக்கு வந்தால் தான், எதிலும் அக்கறை காட்டுவீங்களா...!

***

வி.சி., தலைவர் திருமாவளவன்: மறைந்த முதல்வர் கருணாநிதியை மானசீக குருவாக ஏற்றவன் நான். தி.மு.க.,வில் உறுப்பினராகவில்லையே தவிர, எவ்வித நிபந்தனையும் இன்றி, அக்கட்சியுடன் பழகி வருகிறேன்.

டவுட் தனபாலு: 2016 சட்டசபை பொதுத் தேர்தலின் போது, இந்த வார்த்தையைச் சொல்லி இருந்தால், கருணாநிதி எவ்வளவு மகிழ்ந்திருப்பாரு... ஒருவேளை, அவர் மறைந்த பிறகு தான், அவரை மானசீக குருவாக ஏற்றீங்களோ என்ற, 'டவுட்'டும் வருதே...!

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vvxbdvdg -  ( Posted via: Dinamalar Android App )
15-ஏப்-201919:21:25 IST Report Abuse
Vvxbdvdg Jxvdfdhdbdbdb
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X