பொது செய்தி

இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வில் சாதித்த பெண்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (3)
Advertisement
சிவில் சர்வீஸ்,தேர்வு,சாதனை,பெண்

புதுடில்லி: சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான மாவட்டத்தைச் சேர்ந்த, நம்ரதா ஜெயின், 25, என்ற இளம்பெண், யு.பி.எஸ்.சி., எனப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடம் பெற்று, சாதனை படைத்துள்ளார்.


பயிற்சி:

யு.பி.எஸ்.சி., தேர்வில், மூன்று நிலைகளில், தேர்வு நடத்தப்படுகிறது. இவற்றில் வெற்றி பெறுவோர், ஐ.ஏ.எஸ்., - ஐ.எப்.எஸ்., - ஐ.பி.எஸ்., - அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில், நக்சல் பாதிப்புக்குள்ளான தண்டேவாடா மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகளான, நம்ரதா ஜெயின், 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடத்தை பெற்றுள்ளார்.

ஏற்கனவே, 2016ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில், 99வது இடத்தை பெற்ற நம்ரதா, தெலுங்கானா மாநிலம், ஐதராபாதில் உள்ள, சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.


அடிப்படை கல்வி:

இது குறித்து, நம்ரதா கூறியதாவது: நக்சல் ஆதிக்கத்தில் உள்ள, தண்டேவாடா மாவட்ட கலெக்டராகி, அங்குள்ள ஏழை மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை கல்வி வசதியை ஏற்படுத்தவும் விரும்புகிறேன். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abhinandan jain - chennai,இந்தியா
15-ஏப்-201913:52:51 IST Report Abuse
abhinandan jain நம்ரதா ஜெயின் ஜி வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
மணி - புதுகை,இந்தியா
15-ஏப்-201910:45:16 IST Report Abuse
மணி தொழிலதிபர் ஒருவரின் மகளான, நம்ரதா ஜெயின், 2018ல் நடந்த சிவில் சர்வீஸ் தேர்வில், 12ம் இடத்தை பெற்றுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-ஏப்-201908:42:44 IST Report Abuse
Srinivasan Kannaiya வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X