அரசியல் செய்தி

தமிழ்நாடு

வேட்பாளர்கள் செலவு கணக்கு இணையதளத்தில் வெளியீடு

Added : ஏப் 14, 2019
Advertisement

சென்னை : லோக்சபா மற்றும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், குறைந்த அளவே செலவு செய்துள்ளதாக, கணக்கு சமர்ப்பித்து வருகின்றனர். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், 70 லட்சம் ரூபாய்; சட்டசபை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், 28 லட்சம் ரூபாய் வரை செலவு செய்யலாம். அவர்கள், மூன்று முறை தங்கள் தேர்தல் செலவு கணக்குகளை, செலவினப் பார்வையாளர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். செலவினப் பார்வையாளர்கள், வேட்பாளர்களின் பிரசாரத்தை கண்காணித்து, அவர்கள் செய்யும் செலவு தொடர்பாக, நிழல் பதிவேடு ஒன்றை, தயார் செய்வர்.
வேட்பாளர்கள் சமர்ப்பிக்கும் செலவு கணக்குடன், தங்கள் பதிவேட்டில் உள்ள கணக்குகளை, ஒப்பிட்டு பார்ப்பர்.பிரசாரத்திற்கு வருவோருக்கு, வேட்பாளர் வழங்கும் உணவு, பிரசார வாகனம் என அனைத்திற்கும், தேர்தல் ஆணையம், கட்டணம் நிர்ணயம் செய்துள்ளது. அந்த வகையில், வேட்பாளர்கள், தங்களுடைய முதல் செலவு கணக்கை சமர்ப்பித்துள்ளனர். பெரும்பாலான வேட்பாளர்கள், மிகக் குறைந்த அளவே செலவு செய்துள்ளதாக, கணக்கு காட்டியுள்ளனர்.ஏப்ரல், 4 வரை, 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவாகவே, அரசியல் கட்சி வேட்பாளர்கள், செலவு கணக்கு சமர்ப்பித்துள்ளனர்.
சுயேச்சை வேட்பாளர்கள், ஆயிரக்கணக்கில், செலவு கணக்கு சமர்ப்பித்துள்ளனர். வேட்பாளர்கள் சமர்ப்பித்த செலவு கணக்கு விபரங்களை, www.elections.gov.in என்ற இணைய தளத்தில், தேர்தல்ஆணையம் வெளியிட்டு வருகிறது. நேற்று வரை, ஒரு சில தொகுதி வேட்பாளர்களின், செலவின கணக்கு விபரங்கள் மட்டுமே, பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. மற்ற தொகுதி வேட்பாளர்களின் செலவு கணக்கையும், தேர்தல் பார்வையாளர்கள் பராமரிக்கும், நிழல் பதிவேடு கணக்கு விபரத்தையும் வெளியிட, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X