சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பஸ்கள் வழியாகவும் பணப் பார்சல்

Added : ஏப் 14, 2019
Advertisement

சென்னை : அரசு மற்றும் ஆம்னி பஸ்களிலும், அரசியல் கட்சியினர் பணம் பட்டுவாடா செய்வதாக, போக்குவரத்து கழக ஊழியர்கள் தெரிவித்தனர்.தமிழகத்தில், லோக்சபா தேர்தல் மற்றும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், வரும், 18ம் தேதி நடக்க உள்ளது. பண பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் பறக்கும் படையினர், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அரசியல் கட்சியினர், தபால், கூரியர், ஆம்புலன்ஸ், போலீஸ் வாகனங்கள் வழியாக, பணப் பார்சல்களை அனுப்புவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில், அரசியல் கட்சிகள் பணத்தை அனுப்புவதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது: அரசியல் கட்சிகள், ஆம்னி பஸ்கள் மற்றும் அரசு பஸ்களில், பயணியாக செல்லும் கட்சியினர் வழியாக, பணத்தை அனுப்புகின்றன. வழக்கமாக பஸ் நிறுத்தம் இல்லாத குறிப்பிட்ட இடங்களில் பஸ்சை நிறுத்தி, அங்கு தயாராக நிற்கும், தங்களின் ஆட்களிடம் பணத்தை ஒப்படைக்கின்றனர். இதற்கான, எந்த ஆவணங்களும் அவர்களிடம் இருப்பதில்லை. தேர்தல் ஆணையம், அரசு மற்றும் தனியார் ஆம்னி பஸ்களையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X