அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பட்டுவாடா' செய்ய கோடி கோடியாய் ஆளுங்கட்சி பதுக்கல்: கே.எஸ்.அழகிரி

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : ''லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, ஒவ்வொரு தொகுதியிலும், கோடி, கோடியாக பணத்தை, அ.தி.மு.க., பதுக்கி வைத்துள்ளது,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர், கே.எஸ்.அழகிரி கூறினார்.சென்னை, சத்தியமூர்த்திபவனில் நேற்று அவர் அளித்த பேட்டி:வருமான வரி புலனாய்வுத்துறை இயக்குனர் ஜெனரலுக்கு, அத்துறையின் முதன்மை இயக்குனர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், '2016 சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு, 650 கோடி ரூபாய் பணம் கொடுத்து தான், அ.தி.மு.க., ஆட்சியை தக்க வைத்துள்ளது.

அப்போது, அமைச்சர்களாக இருந்த, பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், நத்தம் விஸ்வநாதன் வாயிலாக, இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது .நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில், விசாரணையை கிடப்பில் போட்டுள்ளது. இதை வைத்து தான், மத்திய அரசு, அ.தி.மு.க.,வை மிரட்டி, இந்த தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்துள்ளது. லோக்சபா தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, ஆளுங்கட்சி, தற்போது ஒவ்வொரு தொகுதியிலும், கோடி, கோடியாக பணத்தை பதுக்கி வைத்துள்ளது.

இது, போலீசாருக்கும், வருமான வரித் துறை அதிகாரிகளுக்கும் தெரியும். அவர்கள், பிரதமருக்கும், முதல்வருக்கும் அஞ்சுகின்றனர்.மேகதாது அணை கட்டப்படும் என, ராகுல் அறிவித்ததாக, முதல்வர், இ.பி.எஸ்., கூறுகிறார். மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்டத்தை தயாரித்து, மத்திய அரசுக்கு, கர்நாடக அரசு அனுப்பி வைத்தது. இதுதொடர்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியின் அனுமதியை, மோடி அரசு கேட்டிருக்க வேண்டும். ஆனால், ராகுல் தான் பிரதமர் போலவும், அவர் தான் கர்நாடகத்திற்கு அனுமதி வழங்கியது போலவும், முதல்வர் பேசுகிறார். அது, தவறு. தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, தமிழக நலன்களை, முதல்வர் விட்டுக் கொடுத்துள்ளார்.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:21:32 IST Report Abuse
Bhaskaran நீங்களும் 2g யில் அடித்தபணத்தை கொஞ்சம் அள்ளிவிடுங்களேன் அவர்களா நீங்களான்னு பாத்துரலாம் ஒருகை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X