அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருமாவுக்கு தி.மு.க., தடை

Added : ஏப் 14, 2019
Advertisement

'விழுப்புரம், சிதம்பரம் தவிர, வேறு தொகுதிகளில் பிரசாரம் செய்ய வேண்டாம்' என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு, தி.மு.க., விதித்துள்ள கட்டுப்பாட்டால், அக்கட்சியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.இதுகுறித்து, வி.சி., வட்டாரங்கள் கூறியதாவது:கூட்டணியில் இருந்தாலும், சில தொகுதிகளில், வி.சி., கட்சியினர், பிரசாரத்திற்கு வந்தால், வேறு சமூகத்தினரின், ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காது என, தி.மு.க., தலைமை கருதுகிறது. இதனால், தி.மு.க., நிர்வாகிகள், 'உங்கள் கட்சி போட்டியிடும், விழுப்புரம், சிதரம்பரத்தில், தேர்தல் பணியில் கவனம் செலுத்தவும்; மற்ற தொகுதிகளில், நாங்கள் பார்த்து கொள்கிறோம்' என, வி.சி., தலைமையிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வி.சி., தலைவர் திருமாவளவன், தான் போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம், பெரம்பலுார் என, சில தொகுதிகளில் மட்டும், பிரசாரம் செய்து வருகிறார்.அ.தி.மு.க., கூட்டணியில் அக்கட்சிகளின் தலைவர்கள், தங்கள் வேனில், வேட்பாளர் மற்றும் அந்த தொகுதியில் உள்ள, தன் கட்சியின் முக்கிய நிர்வாகியையும் ஏற்றி, பிரசாரம் செய்கின்றனர். இதனால், கட்சியினருக்கு, தொகுதி மக்களிடம் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

Baskar - Paris,பிரான்ஸ்
15-ஏப்-201916:24:37 IST Report Abuse
Baskar சுடாலின் திருமாவுக்கு நல்ல குருமா கொடுத்து இருக்கிறார். சுடாலினிடம் சொல்லி அவர்கள் தொண்டர்கள் மூலமாக பரோட்டா கடையில் பரோட்டா திருடி கொடுக்க சொல்லவும். திருமாவுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X