அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை மாலை பிரசாரம் ஓய்வு

Added : ஏப் 14, 2019
Advertisement

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தேர்தல் பிரசாரம், நாளை மாலையுடன் நிறைவடைகிறது. தலைவர்கள் அனைவரும், இறுதிகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதி, 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதி, ஒரு சட்ட சபை தொகுதிக்கும், வரும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், 781 ஆண்கள், 63 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட, 845 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

48 மணி நேரம் சட்டசபை தொகுதிகளில், 242 ஆண்கள், 27 பெண்கள் என, மொத்தம், 269 வேட்பாளர்கள், களத்தில் உள்ளனர். தமிழகம் முழுவதும், 5.99 கோடி வாக்காளர்கள், தேர்தலில் ஓட்டளிக்க உள்ளனர்.அவர்களை கவர்வதற்காக, அரசியல் கட்சி வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும், ஒரு மாதமாக, தொகுதி முழுவதும், பிரசாரம் செய்து வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்கள், தன்னந்தனியே வாகனங்களில், தொகுதியை வலம் வந்தபடி உள்ளனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், தினமும் காலை, 6:00 மணியிலிருந்து, இரவு, 10:00 மணி வரை, ஓய்வின்றி பிரசாரம் செய்து வருகின்றனர்.

தேர்தல் விதிமுறைகளின்படி, ஓட்டுப்பதிவு நிறைவடைவதற்கு, 48 மணி நேரத்திற்கு முன், பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். ஆணையம் தடைஅந்த வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை மாலை, 6:00 மணியுடன், பிரசாரம் நிறைவடைகிறது. அதன்பின், பிரசாரம் செய்ய, தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.எனவே, அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள், கடைசி கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அத்துடன், பணப் பட்டு வாடாவையும் துவக்கிஉள்ளனர். இதுவரை, மந்தமாக இருந்த தேர்தல் களம், பணப் பட்டுவாடாவுக்கு பின் களைகட்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X