சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு

Added : ஏப் 14, 2019
Advertisement

சென்னை : ஓட்டுப்பதிவின் போது, ஆந்திராவில் கலவரம் ஏற்பட்டு, இருவர் கொல்லப்பட்டதை அடுத்து, தமிழகத்தில், பதற்றமான, 7,000 ஓட்டுச் சாவடிகளுக்கு, கூடுதல் பாதுகாப்பு அளிக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான, முதற்கட்ட ஓட்டுப்பதிவு, ஆந்திராவில், ஏப்., 11ல் நடந்தது. அப்போது, அனந்தபரமு மாவட்டம், தாடிபத்ரி சட்டசபை தொகுதியில், ஆளும் தெலுங்கு தேசம் மற்றும் எதிர்க்கட்சியான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் கலவரமாக மாறியதில், இருவர் கொல்லப்பட்டனர்.
தமிழகத்தில், ஏப்., 18ல் ஓட்டுப்பதிவு நடக்க உள்ளதால், தேர்தல், டி.ஜி.பி., - அஷுதோஷ் சுக்லா, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தி வருகிறார். அவர், மண்டல வாரியாக, ஐ.ஜி., - டி.ஐ.ஜி., மற்றும் எஸ்.பி.,க்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆலோசனை நடத்தி, அதிரடி உத்தரவுகள் பிறப்பித்து வருகிறார்.மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள, 67 ஆயிரத்து, 720 ஓட்டுச்சாவடிகள், போலீசாரின் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளன. அவற்றில், 7,125 ஓட்டுச்சாவடிகள் பதற்ற மானவை என கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து, உயர் போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது : பதற்றமான ஓட்டுச்சாவடிகள் குறித்த அனைத்து தகவல்களும், துணை ராணுவத்தினரிடம், கையேடு வடிவில் தரப்பட்டு உள்ளன. தமிழகத்தில், நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் இடங்கள் உட்பட, 7,125க்கும் மேற்பட்ட பதற்றமான ஓட்டுச் சாவடிகளில், துணை ராணுவ படையினருடன், துப்பாக்கி ஏந்திய போலீசாரை, கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X