பொது செய்தி

தமிழ்நாடு

மீன்பிடி தடைக்காலம் இன்று துவக்கம்

Added : ஏப் 14, 2019
Advertisement
 மீன்பிடி தடைக்காலம் இன்று துவக்கம்

தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய, வங்கக் கடல் பகுதிகளில், 60 நாட்களுக்கான மீன்பிடி தடைக்காலம், இன்று துவங்குகிறது. விசைப்படகுகள் அனைத்தும், கரையோரங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.மீன் உள்ளிட்ட கடல் உயிரிகளின் வளத்தை பெருக்கும் வகையில், மத்திய அரசு, குறிப்பிட்ட நாட்கள், மீன் பிடிக்க தடை விதித்து வருகிறது. இதன்படி, தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய, வங்கக் கடல் பகுதிகளில், ஏப்., 15 முதல், 45 நாட்களுக்கு மீன் பிடிக்க, தடை விதிக்கப்பட்டு வந்தது. இந்த தடை, தற்போது, 60 நாட்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.கரை திரும்பினஇதன்படி, தமிழகம், புதுச்சேரியை ஒட்டிய வங்கக் கடல் பகுதிகளில், இன்று அதிகாலை முதல், 60 நாட்களுக்கு மீன் பிடிக்கக் கூடாது.

இதனால், மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள், அவசர அவசரமாக கரை திரும்பின. சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் உட்பட, தமிழகம் முழுவதும், 8,500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள், கரையோரங்களில் நங்கூரமிடப்பட்டுள்ளன.தடைக் காலத்தில், இயந்திரம் இல்லாத சிறு படகுகள், கட்டுமரங்களில் மட்டுமே, மீன்பிடி தொழில் நடக்கும். இதனால், மீன் வரத்து குறையும். தேவையில், 10 சதவீதம் மட்டுமே கிடைக்கும் என்பதால், மீன் விலை கடுமையாக உயரும். தடைக் காலத்தில், மீனவர்கள் தங்களது விசைப்படகுகளை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவர்.

மீனவர்களுக்கு உதவிதடைக்காலத்தில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக் கூடாது என்பதால், மீனவர்கள் குடும்பத்திற்கு, தலா, 5,000 ரூபாய் நிவாரண உதவியை, தமிழக அரசு வழங்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X