அரசியல் செய்தி

தமிழ்நாடு

கேபிள், 'டிவி' கட்டணத்தால் ஓட்டு வங்கி சரியும் அபாயம்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement

அரசு கேபிள், 'டிவி' கட்டணம், நான்கு மடங்கு உயர்ந்துள்ளதால், பெண்கள் இடையே அதிருப்தி நிலவுகிறது. இதனால், லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சிக்கு ஓட்டு வங்கி சரியும் அபாயம் உள்ளது. இதையடுத்து, ஜெயலலிதா கொண்டுவந்த, 70 ரூபாய் திட்டத்தை முதல்வர் அறிவிப்பாரா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.இரண்டு வித கட்டணங்கள்மக்களிடம், தனியார் கேபிள் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்க, 2011 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது, மறைந்த, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 'கேபிள், 'டிவி'யை அரசே ஏற்று நடத்தும். 70 ரூபாய்க்கு, அனைத்து சேனல்களையும் பார்க்கலாம்' என அறிவித்தார்.

இதனால், அ.தி.மு.க.,வுக்கு பெண்கள் இடையே வரவேற்பு அதிகரித்தது. அதற்கேற்ப, 2011ல் மட்டுமின்றி, அதன்பின் நடந்த அனைத்து தேர்தல்களிலும், அக்கட்சிக்கு, பெண்கள் ஓட்டு அதிகளவில் விழுந்தது.அரசு கேபிள், 'டிவி'யில், தமிழகம் முழுவதும், 1.45 கோடி இணைப்புகள் வழங்கப்பட்டு, சேவை அளிக்கப்பட்டது. 2017 நவம்பர் முதல், கேபிள் கட்டணத்தில், 'பேக்கேஜ்' முறை அறிமுகமானது. 125 ரூபாயுடன் வரி, 175 ரூபாயுடன் வரி என, இரண்டு வித கட்டணங்கள் அமலாகின.முதல் முறையில், குறிப்பிட்ட தமிழ் சேனல்கள் மட்டும் ஒளிபரப்பான நிலையில், இரண்டாவது முறையில் அனைத்து சேனல்களும் ஒளிபரப்பட்டன.

கடந்த ஜன., 31ல், மத்திய அரசின், 'ட்ராய்' உத்தரவால், அச்சேவை நிறுத்தப்பட்டு, அனைத்துமே கட்டண சேனல்களாக மாற்றப்பட்டன. இதில், குறைந்தபட்சம், 220 ரூபாய் முதல், அதிகபட்சம், 450 ரூபாய் வரை, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, வசூலிக்கப்படுகிறது.தனியார் டிஷ் நிறுவனங்கள், மாதத்துக்கு, 199 ரூபாய் முதல், 225 ரூபாய்க்கு, அனைத்து சேனல்களையும் ஒளிபரப்புகின்றன.தனியாரை விட, அரசு கேபிள், 'டிவி' கட்டணம் அதிகம் என்பதால், அந்த இணைப்பை துண்டித்து, தனியார் நிறுவனங்களை, மக்கள் நாடத் தொடங்கினர்.பிப்ரவரி, மார்ச்சில் மட்டுமே, தமிழகம் முழுவதும், 14.40 லட்சம் இணைப்புகள், தனியார் நிறுவனங்களுக்கு சென்றன.

கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள், வருவாயை இழந்து வருவதால், அவர்கள் மத்தியிலும், அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.பெரும்பாலான வீடுகளில், வீட்டு செலவுகளை, பெண்களே பார்த்துக் கொள்கின்றனர். இதை மனதில் வைத்து, அவர்களின் ஓட்டுகளை கவர, சிவகங்கை தொகுதியில் போட்டியிடும், 'காங்., வேட்பாளர் கார்த்திக் சிதம்பரம், 'கேபிள் கட்டணத்தை குறைப்பேன்' என, பிரசாரத்தில் வாக்குறுதி அளித்து வருகிறார்.இந்த கேபிள் கட்டணத்தால், லோக்சபா தேர்தலில், ஆளுங்கட்சிக்கு பெண்களின் ஓட்டுகள் சரியும் என, உளவுத்துறை அரசுக்கு அறிக்கை அளித்தது.
அதனால், த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா, பா.ம.க., தலைவர் ராமதாஸ் ஆகியோர், கேபிள் கட்டண குறைப்பு குறித்த அறிவிப்பை, முதல்வர், துணை முதல்வர் வெளியிட, வலியுறுத்தி வருகின்றனர்.தமிழ்நாடு கேபிள், 'டிவி' ஆப்பரேட்டர்கள் பொதுநலச் சங்க மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:இரண்டு மாதங்களில், கேபிள், 'டிவி' கட்டணம், நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. இதனால், மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்து, தனியார் நிறுவனங்களுக்கு படையெடுக்கின்றனர். தமிழக அரசு, இதை கண்டுகொள்ளவில்லை.தேர்தல் பிரசாரத்தின்போது, முதல்வர், இ.பி.எஸ்., 'கேபிள் கட்டணத்தை குறைக்க, நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மட்டுமே பேசியுள்ளார். அதற்கான மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.அத்துடன், அரசு கேபிள், 'டிவி' நிறுவனத்தில், குளறுபடி உள்ளது.

இது, லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணிக்கு எதிரொலிக்க வாய்ப்புள்ளதோடு, குறிப்பாக, பெண்களின் ஓட்டு களை இழக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் கூறினாார். ஆளுங்கட்சி மாவட்ட செயலர் ஒருவர் கூறுகையில், 'ஊடகங்கள் வெளியிடும் கருத்து கணிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதனால், முதல்வர், துணை முதல்வர், அ.தி.மு.க., வெற்றியை உறுதிப்படுத்த, கேபிள், 'டிவி' கட்டண குறைப்பை, உடனடியாக அறிவிக்க வேண்டும்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:32:16 IST Report Abuse
Bhaskaran Veettuvari thaneervari perunthukattanam kadaisiyaaga cablekattanam nadutharavargathukku adi mel adi
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X