பதிவு செய்த நாள் :
'அப்துல்லா - முப்தி குடும்பத்தினர்
நாட்டை துண்டாட விட மாட்டேன்'

கதுவா: ''ஜம்மு - காஷ்மீரை, மூன்று தலைமுறைகளாக ஆண்டு வரும் அப்துல்லா குடும்பத்தாரையும், முப்தி குடும்பத்தாரையும், நாட்டை துண்டாட அனுமதிக்க மாட்டேன்,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பிரதமர்,நரேந்திர மோடி,அப்துல்லா,முப்தி,குடும்பத்தினர்,நாட்டை துண்டாட,விட மாட்டேன்


ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கதுவாவில், நேற்று நடந்த, பா.ஜ., தேர்தல் பிரசார கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை, மூன்று தலைமுறைகளாக, அப்துல்லா மற்றும் முப்தி குடும்பத்தினர்

ஆட்சி நடத்தி, சுரண்டி விட்டனர். மாநிலத்தின் எதிர்காலம் கருதி, அவர்களை, மக்கள் விரட்டி அடிக்க வேண்டும்.

இவர்களை தோற்கடித்தால் மட்டுமே, ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு, சிறப்பான எதிர்காலம் அமையும். அவர்களின் நோக்கம், நாட்டை துண்டாட வேண்டும் என்பது தான்; ஆனால், அதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். மாநிலத்தில் நடந்த முதல்கட்ட ஓட்டுப்பதிவில், ஏராளமான வாக்காளர்கள், ஆர்வத்துடன் ஓட்டளித்துள்ளனர். இதனால், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள், எதிர்க்கட்சியினர் கலக்கம் அடைந்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சி, கொடிய விஷக்கிருமிகளால் பாதிக்கப்பட்டு உள்ளது. அந்தக் கட்சியின் தேர்தல் அறிக்கையில், ஆயுதப் படைக்கு அளிக்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தேசப்பற்று சிறிதாவது இருந்தால், இப்படி தெரிவிப்பரா! இப்போது இருப்பது புதிய இந்தியா. ஏற்கனவே செய்ததுபோல், பயங்கரவாத செயல்களை நடத்தி, இந்தியாவை பணிய வைக்க முடியாது. ஒவ்வொரு தாக்குதலுக்கும், சரியான பதிலடி கொடுக்கப்படும். 'ஜனநாயகத்துக்கு, வாரிசு அரசியல் பெரும் ஆபத்து' என, சட்ட மேதை அம்பேத்கர் கூறினார். வாரிசு அரசியலுக்கு, இந்த தேர்தலில், மக்கள் தங்கள் ஓட்டுகள் மூலம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (20+ 32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஏப்-201914:46:42 IST Report Abuse

Nepolian Sநீங்க சொல்லாதீங்க அதை

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
15-ஏப்-201914:40:00 IST Report Abuse

sahayadhasஎங்க தாக்கினீங்க. இம்ரான்ல பிடிச்சு உள்ள வச்ச .இப்பவும் சரமாரியா தாக்கிட்டு தான் உள்ளனர்.

Rate this:
Narayanan Sakthi - Nemathanpatti,இந்தியா
15-ஏப்-201914:37:59 IST Report Abuse

Narayanan Sakthiஎப்படி இருந்தாலும் அணுகு பி ஜெ பி ஒரு அங்குல இடம் கூட வாங்க வழியில்லை, அதன் சர்வாதிகார அமைப்பான கார்போரேட்டும் உள்ளே நுழைய முடியவில்லை எனவே தான் இந்த பிரசாரம். இது புரியணும்னா....?

Rate this:
மேலும் 17 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X