சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓரின சேர்க்கை தகராறு: வாலிபர் கொலை

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (10)
Advertisement
 ஓரின சேர்க்கை தகராறு: வாலிபர் கொலை

சென்னிமலை : பெருந்துறை அருகே, ஓரினச் சேர்க்கை தகராறில், வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் கள்ளியம்புதுார், கே.பி.ஆர்., தோட்டம் அருகில், நேற்று முன்தினம், பலத்த காயங்களுடன் ஒருவர், உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அப்பகுதியினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அவரது உடல் நிலை கவலைக்கிடமாக இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார்.

ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று இறந்தார். பெருந்துறை போலீசார் விசாரணையில், இறந்தவர், திருப்பூர் மாவட்டம், கூனம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ், 34, என தெரிந்தது. மது பழக்கம் இருந்ததால், மனைவி பிரிந்து சென்று விட்டார். கோவிந்தராஜுக்கு புதிய நண்பர்கள் பழக்கமாக, அவர்களுடன் சேர்ந்து, அடிக்கடி, ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று, உள்ளூர் மாரியம்மன் கோவிலில் பண்டிகை நடந்துள்ளது. அப்போது, கோவிந்தராஜுடன், விஜயமங்கலத்தை சேர்ந்த தியாகராஜன், 23, நவீன்குமார், 21, கவின் ஆகியோர், கள்ளியம்புதுாருக்கு மது குடிக்க வந்துள்ளனர்.

திரும்பி செல்லும் வழியில், காட்டுப் பகுதியில், நான்கு பேரும், ஓரின சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர்.அப்போது, ஏற்பட்ட தகராறில், மற்ற மூவரும் சேர்ந்து, கோவிந்தராஜை தாக்கியதில், படுகாயமடைந்துள்ளார். இதையடுத்து, மூவரும் அங்கிருந்து ஓடி விட்டனர். இந்நிலையில், நவீன்குமார், தியாகராஜன் ஆகியோர், நேற்று காலை, சரணடைந்தனர். அவர்களை, பெருந்துறை போலீசார் கைது செய்து, கவினை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நக்கீரன் - திருநெல்வேலி சீமை,இந்தியா
22-ஏப்-201910:35:09 IST Report Abuse
நக்கீரன் இதை விட கேவலம் என்ன இருக்கிறது? மதுவின் போதையால் இப்படி தகாத செயல்கள் செய்து வாழ்க்கையை இழப்பதுடன் சமூகத்தையும் சீரழிக்கிறார்கள். அரசே ஊத்திக்கொடுத்தால் அந்த சமுதாயம் எப்படி உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel
Nathan - Hyderabad,இந்தியா
20-ஏப்-201907:08:21 IST Report Abuse
Nathan கண்ணராவி, தூ
Rate this:
Share this comment
Cancel
RAJ - dammam,சவுதி அரேபியா
18-ஏப்-201901:22:03 IST Report Abuse
RAJ Shame
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X