சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லோடு ஆட்டோ மோதியதில் மூவர் பலி

Added : ஏப் 14, 2019
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சை அருகே, கோவிலுக்கு சென்று திரும்பிய தாய், மகள் உட்பட மூவர், லோடு ஆட்டோ மோதிய விபத்தில் உயிரிழந்தனர்.தஞ்சாவூர், திருச்சிற்றம்பலம் அடுத்த செருவாவிடுதியைச் சேர்ந்தவர் தேன்மொழி, 44. இவரது மகள் மவுனிகா, 22; பி.எஸ்.சி., நர்சிங் படித்து, பட்டுக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களது உறவினர் மகன், சஞ்சய்குமார், 10. இவர்கள், மூவரும், தமிழ் புத்தாண்டு தினமான நேற்று, புதுக்கோட்டை, மாங்காட்டில் உள்ள விடங்கேஷ்வரர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து, யமஹா டூ - வீலரில், மதியம், 2:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

டூ - வீலரை மவுனிகா ஓட்டினார். அப்போது, அணவயல் நோக்கி வந்த லோடு ஆட்டோ, டூ - வீலர் மீது பயங்கர வேகத்தில் மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே மவுனிகா, தேன்மொழி இறந்தனர். சஞ்சய்குமார், மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தான்.திருச்சிற்றம்பலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மது போதையில், லோடு ஆட்டோவை ஓட்டிய டிரைவர் சந்திரன், 34, என்பவனை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X