பதிவு செய்த நாள் :
மாய்மாலம்!
ஓட்டு இயந்திரம் குறித்து எதிர்க்கட்சியினர்...
தேர்தல் நடைமுறை துவங்கியபின் ஆலோசனை

லோக்சபா தேர்தல் நடைமுறைகள் துவங்கி, முதல் கட்டமாக, 91 தொகுதிகளுக்கு தேர்தலே நடந்து முடிந்து விட்ட நிலையில், ஓட்டு இயந்திரம் குறித்து, எதிர்க்கட்சியினருக்கு திடீர் சந்தேகம் எழுந்துள்ளது. ஓட்டு இயந்திரம் தவறாக பயன்படுத்துவதாக கூறி, எதிர்க்கட்சி தலைவர்கள் பலர், நேற்று, டில்லியில் ஆலோசனை நடத்தினர்.

ஓட்டு இயந்திரம்,எதிர்க்கட்சியினர்,மாய்மாலம்


லோக்சபாவுக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. கடந்த, 11ல், நடந்த முதல் கட்டத் தேர்தலின்போது, ஆந்திராவில் பல்வேறு இடங்களில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்கவில்லை என, புகார் எழுந்தது. இதனால், 150 ஓட்டுச் சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்தும்படி, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு கூறியிருந்தார்.

இது தொடர்பாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து, அவர் புகார் கொடுத்தார். அப்போது, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிப்பதாக, தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் நேரம் கேட்டிருந்தார். அதன்படி, ஒரு குழுவை, அவர் அழைத்துச் சென்றார்.

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் புகாருக்கு, தேர்தல் ஆணையம் பதில் அளித்தது; அதில் கூறப்பட்டுள்ளதாவது: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பாக விவாதிக்க, உங்கள் கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இயந்திரத்தில் பிரச்னை உள்ளதை நிரூபிக்கும்

நிபுணர்களை அழைத்து வருவதாக கூறினீர்கள். ஆனால், ஹரிபிரசாத் என்பவரை, உடன் அழைத்து வந்தீர்கள். ஆனால், நீங்கள் எங்களுக்கு அளித்த பட்டியலில், அவரது பெயர் இல்லை.

கூட்டம்:


விசாரணை நடத்தியதில், 2010ல், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியதாக, ஹரிபிரசாத் மீது, மஹாராஷ்டிராவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது போன்றவர்களை, விவாதத்துக்கு அழைத்து வந்தது ஏன்? மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடிய வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விளக்கம் அளிக்க தயாராக இல்லை. வேறு நிபுணர்களை அழைத்து வரவும். இவ்வாறு, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது, சந்திரபாபு நாயுடுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தலைமையில், எதிர்க்கட்சி தலைவர்கள், 22 பேர் பங்கேற்ற கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. அதில், முதல் கட்டத் தேர்தலில், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

கூட்டத்திற்குப் பின், சந்திரபாபு நாயுடு கூறியதாவது: மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் தோல்வி அடைந்து விட்டது. ஜெர்மனி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் கூட, ஓட்டுச் சீட்டு முறைக்கு திரும்பி விட்டனர். நம் நாட்டிலும், ஓட்டுச் சீட்டு முறைக்கு மாற வேண்டிய காலம் வந்து விட்டது.

வழக்கு:


நானும் பல தேர்தல்களை பார்த்துள்ளேன். ஆனால், பிரச்னையை புரிந்து கொள்ளாத,

Advertisement

பொறுப்பில்லாத, இதுபோன்ற ஒரு தேர்தல் ஆணையத்தை, இது வரை பார்த்ததில்லை. பா.ஜ.,வின் கிளை அலுவலமாக, தேர்தல் ஆணையம் மாறியுள்ளது. மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் ஓட்டுடன், அதனுடன் இணைக்கப்பட்டுள்ள, ஓட்டு உறுதி சீட்டு இயந்திரத்தில் பதிவாகும் சீட்டுகளை எண்ணி, ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.

ஒரு சட்டசபை தொகுதியில், ஐந்து ஓட்டுச் சாவடிகளில், இவ்வாறு ஒப்பிட்டு, சரி பார்க்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. முதல் கட்டத் தேர்தலில் நடந்துள்ள மோசடிகளை அடுத்து, 50 சதவீத ஓட்டு உறுதி சீட்டுகளை எண்ணி, சரி பார்க்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை வலியுறுத்த உள்ளோம். இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு பக்கம், ஓட்டுப் பதிவு இயந்திரத்தை திருடியவனை, தேர்தல் ஆணையத்துக்கு அழைத்துச் சென்று, சந்திரபாபு நாயுடு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மற்றொரு பக்கம், ஓட்டுப் பதிவு இயந்திரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக, அவர் கூறிஉள்ளது, தேர்தலுக்காக அவர் நடத்தும் மாய்மாலமாகவே பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (10+ 52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
15-ஏப்-201920:36:14 IST Report Abuse

adalarasanஇதே வோட்டு எந்திரம் மூலமாக நீங்க ,பல தேர்தல்களில் ஜெயித்தீர்களே?அது இப்படித்தானோ?இவர்களுக்கு பொருந்தும் இப்ப தோல்வி பயம் வந்திடுச்சு? தண்ணீல முழுகுகிறவன், எல்லோரையும் இழுத்து சென்றுவிடுவான்" என்ற பழமொழி,இவர்களுக்கு பொருந்தும் தேர்தலே நடத்த விடமாட்டாங்க போலிருக்குஒரே அலறல்…?

Rate this:
kandhan. - chennai,இந்தியா
15-ஏப்-201918:16:42 IST Report Abuse

kandhan.

Rate this:
bal - chennai,இந்தியா
15-ஏப்-201914:12:38 IST Report Abuse

balபோட்டோவில் இருக்கும் மூவரும் திருடர்கள்...இருவர் சட்ட வல்லுநர்கள்...பொய் சொல்லி புழைப்பவர்கள்..ஒருவர் திருப்பதியில் திருடுபவர்....

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X