செல்லாமல் போகும் தபால் ஓட்டுகள்

Added : ஏப் 14, 2019
Advertisement
 செல்லாமல் போகும்  தபால் ஓட்டுகள்

லோக்சபா தேர்தல்களில் பதிவாகும், தபால் ஓட்டுகளில், சராசரியாக, 19 சதவீதம், செல்லாத ஓட்டுகளாக ஆகின்றன. அந்த ஓட்டுகளில், தங்கள் சொந்த கதை, சோக கதைகளை பலர் எழுதுவதால், நிராகரிக்கப்படுகின்றன.
லோக்சபா தேர்தலில், முதல் கட்ட ஓட்டுப்பதிவு முடிந்துள்ளது. இரண்டாம் கட்டம், 18ம் தேதி நடக்க உள்ளது. அதன் பிறகும், ஐந்து கட்டங்களாக, ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.இந்நிலையில், தேர்தல் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீஸ், ராணுவத்தினர் ஓட்டுகள், தபால் ஓட்டுகளாக பதிவு செய்யப்படுகின்றன. பெரும்பாலான அரசு ஊழியர்கள், தங்கள் ஓட்டுகளை, தங்களுக்கு பிடித்தமான கட்சிகளுக்கு, பதிவு செய்ய விரும்புகின்றனர். பல மாநிலங்களில் தபால் ஓட்டுகள், வேட்பாளரின் வெற்றியை தீர்மானிக்கும், முக்கிய அஸ்திரங்களாக மாறுகின்றன.ஆனால், அவர்களின் எண்ணங்களுக்கு மாறாக, பெரும்பாலான தபால் ஓட்டுகள், செல்லாத ஓட்டுகளாக மாறுவது, தெரிந்துள்ளது. கடந்த, 2004, 2009 மற்றும் 2014 தேர்தல்களில், சராசரியாக, 19 சதவீத தபால் ஓட்டுகள், செல்லாதவையாக, நிராகரிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் மட்டும், 2004ல், 10 சதவீதம்; 2009ல், 16 மற்றும் 2014ல், 20 சதவீத தபால் ஓட்டுகள், ஓட்டு எண்ணிக்கையின் போது, செல்லாதவையாக அறிவிக்கப்பட்டு, குப்பைக்கு சென்றுள்ளன. ஆந்திராவில், 21.5; கோவாவில், 16; மஹாராஷ்டிராவில், 19; மத்திய பிரதேசத்தில், 17 மற்றும் மேற்கு வங்கத்தில், 19 சதவீத ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன.இதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பெரும்பாலானவர்கள் தங்களுக்கு வழங்கப்படும், தபால் ஓட்டு விண்ணப்பத்தை, முழுமையாக நிரப்புவதில்லை; பிறந்த தேதியை மாற்றி பதிவிடுகின்றனர்; முகவரியை தவறாக குறிப்பிடுகின்றனர்.இது போன்ற பல காரணங்களால், அவர்களின் ஓட்டுகள், செல்லாத ஓட்டுகளாகின்றன.சில இடங்களில், தபால் ஓட்டுகளில், 'பாரத் மாதா கி ஜெய்... இந்தியா ஜிந்தாபாத்... தமிழன் என்று சொல்லடா... வடக்கு வாழ்கிறது - தெற்கு பார்க்கிறது; வந்தே மாதரம்...' போன்ற வசனங்களை எழுதுகின்றனர்.அதனாலும், தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்படுகின்றன.- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X