இரண்டு தொகுதியை கைப்பற்ற மார்க்சிஸ்ட் உடன் மல்லுக்கட்டு

Added : ஏப் 14, 2019
Advertisement
இரண்டு தொகுதியை கைப்பற்ற  மார்க்சிஸ்ட் உடன் மல்லுக்கட்டு

வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான, திரிபுராவில், 23 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி சாதனையை உடைக்க, பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகள் வியூகம் வகுத்துள்ளன.திரிபுரா மாநிலத்தில், 1996 முதல், 23 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் வசமே லோக்சபா தொகுதிகள் உள்ளன. அதே போல், சட்டசபையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசமே இருந்தது.இதை உடைத்து, 2018ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., ஆட்சியை பிடித்தது. இதற்காக, பா.ஜ.,வுடன், திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த தேர்தலில், இந்த கூட்டணி, லோக்சபா தொகுதிகளையும் பிடிக்க திட்டமிட்டுள்ளது.

திரிபுரா மேற்கு மற்றும் கிழக்கு தொகுதிகளில், மேற்கு தொகுதிக்கு, ஏப்., 11ல் தேர்தல் முடிந்துள்ளது; கிழக்குக்கு, 18ல் தேர்தல் நடக்கிறது.இங்கு, 1996 முதல், 2009 வரை, பஜு பன் ஆர்யன் என்ற, மார்க்சிஸ்ட் எம்.பி., ஐந்து முறை வெற்றி பெற்றார். கடந்த, 2014 தேர்தலில், அதே கட்சியை சேர்ந்த, ஜிதேந்திர சவுத்ரி எம்.பி.,யானார்; இந்த தேர்தலிலும், அவரே போட்டியிடுகிறார்.திரிபுரா பூர்வகுடி மக்கள் முன்னணி கட்சி, பா.ஜ., கூட்டணியில் இருந்தாலும், திரிபுரா கிழக்கு தொகுதியை, பா.ஜ., விட்டு தராததால், நரேந்திர சந்திரா என்ற வேட்பாளரை தனியாக நிறுத்திஉள்ளது.மொத்தம், 30 சட்டசபை தொகுதிகளிலும், பழங்குடியினர், 13 லட்சம் பேர் உள்ளதால், அவர்களின் ஓட்டுகளை பெற, இந்த கட்சி திட்டமிட்டுள்ளது.பா.ஜ., சார்பில், ரேபதி; காங்., சார்பில், ராஜ்குமாரி பிரக்ஞா போட்டியிடுகின்றனர். 23 ஆண்டு கால, மார்க்சிஸ்ட் கட்சியின் சகாப்தம் முடிவுக்கு வருமா, திரிபுரா பழங்குடியின மக்கள் கட்சியின் பிரதிநிதிக்கு வெற்றி கிடைக்குமா என்பது, மே, 23ல் தான் தெரியும்.- சமுத்ர குப்த காஷ்யப் -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X