தேர்தலை சீர்குலைக்க சதி பலத்த பாதுகாப்பு| Dinamalar

தேர்தலை சீர்குலைக்க சதி பலத்த பாதுகாப்பு

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)

புதுடில்லி : ஜம்மு - காஷ்மீரில், லோக்பா தேர்தலை சீர்குலைக்கும் வகையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளதை அடுத்து, மாநிலம் முழுவதும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஆறு லோக்சபா தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல்கட்டமாக, இரண்டு தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துள்ள நிலையில், உதாம்பூர், ஸ்ரீநகர் தொகுதிகளுக்கு, 18ல், தேர்தல் நடக்கவுள்ளது.

முதல் கட்ட தேர்தலில், யாரும் எதிர்பார்க்காத வகையில், ஓட்டுப் பதிவு சதவீதம் அதிகரித்தது. இதனால், ஆத்திரம் அடைந்துள்ள பயங்கரவாதிகள், இரண்டாம் கட்ட தேர்தலை சீர்குலைக்கும் வகையில், தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக, புலனாய்வு அமைப்புகள் எச்சரித்துள்ளன.தேர்தல் நடக்கும் பகுதிகளில், அதிகாலை நேரங்களில், நெடுஞ்சாலைகளில், மோட்டார் சைக்கிளில் வந்து, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என, எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X