அலிகார்... பூட்டுக்கு மட்டுமல்ல; சர்ச்சைக்கும் ரொம்ப புகழ்!

Added : ஏப் 14, 2019
Advertisement
அலிகார்... பூட்டுக்கு மட்டுமல்ல; சர்ச்சைக்கும் ரொம்ப புகழ்!

மிகவும் புகழ்பெற்ற, அலிகார் பல்கலையில், இட ஒதுக்கீடு பிரச்னையை மையப்படுத்தி, உ.பி.,யில், அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்கின்றன.உத்தர பிரதேசத்தில் உள்ள பிரபலமான லோக்சபா தொகுதி, அலிகார். இங்கு உயர் கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், அடிக்கடி சர்ச்சைகள் எழும். மேலும், பூட்டு உற்பத்தி தொழிலுக்கும், இது பிரபலமானது.

இந்த தொகுதியில் உள்ள, அலிகார் முஸ்லிம் பல்கலை, மிக பழமையானது; அரசியல் பிரச்னைகள் நிறைந்த கல்வி நிறுவனம். இந்த பல்பல்கலையில், முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதால், இதற்கு வழங்கப்படும் அரசு நிதி உதவியை நிறுத்த வேண்டும் என, பா.ஜ., நீண்ட நாளாக முயற்சித்து வருகிறது.தற்போது, அலிகார் தொகுதி லோக்சபா தேர்தலில், பல்கலையின் பிரச்னையை மையப்படுத்தி, முதல்வர், பா.ஜ.,வைச் சேர்ந்த, யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்கிறார்.பா.ஜ., - எம்.பி.,யை தேர்வு செய்தால், அலிகார் பல்கலையில், அனைத்து பிரிவினருக்கும், இட ஒதுக்கீடு அடிப்படையில், மாணவர் சேர்க்கையும், வேலைவாய்ப்பும் கிடைக்கும் என, அவர் உறுதி அளித்துள்ளார்.இங்கு, பா.ஜ.,வின் தற்போதைய, எம்.பி., சதீஷ் குமார் கவுதமுக்கு, மீண்டும், 'சீட்' தரப்பட்டுள்ளது. அவரை எதிர்த்து, மாயாவதி, அகிலேஷ் யாதவின் கூட்டணி சார்பில், அஜித் பல்யான் நிறுத்தப்பட்டுஉள்ளார். காங்., சார்பில், பிஜேந்திர சிங் போட்டியிடுகிறார்.

பா.ஜ., வேட்பாளருக்கு, இந்த தொகுதியில் உள்ள, தாக்குர், லோத் இன மக்களின் ஆதரவு திரட்டப்படுகிறது. முஸ்லிம் ஓட்டுகளை, மத அடிப்படையில் மாயாவதி கூட்டணி யும், காங்கிரசும் பங்கு போடும் நிலை உள்ளது. அதனால், அலிகாரில் பெரும்பான்மையாக உள்ள, முஸ்லிம் ஓட்டுகள் பிரிய வாய்ப்புள்ளது.
தொகுதியின் வெற்றிக்கு, பா.ஜ.,வின் மூத்த தலைவர், கல்யாண் சிங் பின்னணியில் உதவுகிறார். அவர், உ.பி., முதல்வராக இருந்த போது தான், 1992, டிச., 6ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என, அவரது, 'உதவியை' பாராட்டி, யோகி ஆதித்யநாத் பிரசாரம் செய்கிறார்.இந்த தொகுதியில், தலித், முஸ்லிம் ஓட்டுகள் பிரிவதால், ஹிந்துக்களின் பெரும்பாலான பிரிவினரின் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு எளிதாக கிடைக்கும்; அதனால் வெற்றி எளிது என, அக்கட்சி நம்பிக்கையுடன் செயல்படுகிறது.- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X