பொது செய்தி

இந்தியா

வேறு நிறுவனங்களுக்கு தாவும், 'ஜெட்' விமானிகள்

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 வேறு நிறுவனங்களுக்கு தாவும், 'ஜெட்' விமானிகள்

புதுடில்லி : கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, 'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், குறைந்த சம்பளத்தில், வேறு விமான நிறுவனங்களுக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.விமான போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க, கட்டண சலுகை உள்ளிட்ட, பல சலுகைகளை அறிவித்தன. நிதி நெருக்கடிதொழில் போட்டி மற்றும் அதிக சலுகை காரணமாக, பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனத்தின், 90 சதவீத சேவைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன.

வெளிநாட்டு சேவைகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட்டது. விமானிகள், பொறியாளர்கள் மற்றும் நிர்வாக பொறுப்பில் உள்ளவர்களுக்கு, மூன்று மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. மற்ற ஊழியர்களுக்கு, மார்ச் சம்பளம் தரப்படவில்லை.மாதத்திற்கு, 4 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்ற விமானிகள் மற்றும் பொறியாளர்கள், தற்போது, குடும்பம் நடத்தவும், கடன்களை செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர்.வேலை வாய்ப்புஇந்த நிலையை பயன்படுத்தி, ஜெட் நிறுவன விமானிகளுக்கு, 30 - 50 சதவீதம் வரை, குறைவான சம்பளம் தருவதாகக் கூறி, பல விமான நிறுவனங்கள், வேலை வாய்ப்பு அளிக்க முன் வந்துள்ளன.

மாதம், 4 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய விமானிகள், தற்போது, 2 லட்சம் ரூபாய்க்கும் குறைவான சம்பளத்தில், 'ஸ்பைஸ் ஜெட்' உள்ளிட்ட, விமான நிறுவனங்களில் பணிக்கு சேர்ந்து வருகின்றனர்.ஐந்து ஆண்டுகள் வரை பணி அனுபவம் உள்ள விமானிகள் மற்றும் பொறியாளர்கள், குறைவான சம்பளத்தில் வேலை கிடைத்தாலும், தங்கள் முன் அனுபவம் மற்றும் சம்பள விகிதம் பாதிக்கப்படும் என்பதால், இந்த சலுகையை ஏற்க மறுத்துள்ளனர்.

விரைவில் நிலைமை சீராகும் என்ற நம்பிக்கையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளனர்.இதற்கிடையே, இன்று முதல், 1,100 விமானிகள், தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக, ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
15-ஏப்-201915:51:16 IST Report Abuse
Loganathan Kuttuva Several years before software engineers faced similar problem in software industries.The employees accepted reduced salaries without any hesitation.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X