ஆபாச, வீடியோ வெளியீடு தொழில் அதிபர்கள் பீதி| Dinamalar

ஆபாச, 'வீடியோ' வெளியீடு தொழில் அதிபர்கள் பீதி

Added : ஏப் 14, 2019 | கருத்துகள் (1)

புதுடில்லி : ஆபாச, 'வீடியோ' எடுத்து, தொழிலதிபர்கள் உட்பட பலரை மிரட்டி, பணம் பறித்த இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லியை சேர்ந்த டாக்டர் ஒருவர், கடந்த அக்டோபரில், போலீசில் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது : மருத்துவமனை ஒன்றில், டாக்டராக பணிபுரிந்து வருகிறேன். சில மாதங்களுக்கு முன், சிகிச்சை பெறுவதற்காக, மருத்துவமனைக்கு, ஒரு பெண், தினமும் வந்தாள்.ஒரு நாள், என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 'என்னால், இன்று வர முடியவில்லை.

என் வீட்டுக்கு வர முடியுமா' என, கேட்டாள்; நானும், அவள் வீட்டுக்கு சென்றேன்.எனக்கு குளிர்பானம் கொடுத்தாள். அதில், போதை பொருள் கலந்திருந்தது, எனக்கு தெரியாது. என்னுடன் அவள், உடலுறவில் ஈடுபட்டாள். அதன்பின், மருத்துவமனைக்கு, அந்த பெண் வரவில்லை.ஒரு மாதம் கழித்து, நுார் மஜார் என்பவன், என்னை, தொலைபேசியில் தொடர்பு கொண்டான். அந்தப் பெண்ணுடன், நான் இருந்ததை வீடியோ எடுத்துள்ளதாகவும், 20 லட்சம் ரூபாய் தராவிட்டால், வீடியோவை வெளியிடுவதாகவும், மிரட்டினான்.

அவனை கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, புகாரில் அவர் கூறியிருந்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது தான், தொழிலதிபர்கள், டாக்டர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்கள் என, செல்வந்தர்கள் பலரிடம், இதுபோல், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி, அந்த கும்பல், லட்சக்கணக்கில் பணம் பறித்து உள்ளது தெரிந்தது.இந்நிலையில், டில்லி புறநகர் பகுதியில் பதுங்கியிருந்த, மஜாரை, போலீசார் கைது செய்தனர்.
அவனது கூட்டாளி, மகேந்திரன் என்பவனையும் கைது செய்து, அவர்களிடமிருந்த, ஆபாச வீடியோக்களையும், பறிமுதல் செய்தனர்.இந்த கும்பலை சேர்ந்த பெண் உட்பட, மேலும் சிலரை, போலீசார் தேடி வருகின்றனர். ஆபாச வீடியோ சம்பவம், டில்லியில் உள்ள தொழிலதிபர்களிடையே, பீதியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X