ஹேமமாலினிக்கு தர்மேந்திரா பிரசாரம்

Added : ஏப் 15, 2019
Advertisement
 ஹேமமாலினிக்கு தர்மேந்திரா பிரசாரம்

மதுரா : உத்தர பிரதேச மாநிலம், மதுரா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மீண்டும் போட்டியிடும், நடிகை ஹேமமாலினிக்கு ஆதரவாக, அவரது கணவரும், முன்னாள் பாலிவுட் நடிகருமான தர்மேந்திரா, 83, நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன.இவற்றில் எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள, 72 தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கவுள்ளது.இங்குள்ள மதுரா தொகுதியில், 18ல் தேர்தல் நடக்கவுள்ளது.

இந்த தொகுதியில், பா.ஜ., சார்பில், மீண்டும் போட்டியிடும், பாலிவுட் நடிகை, ஹேமமாலினி, 70, தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, வாக்காளர்களிடையே ஓட்டு சேகரித்து வருகிறார். இந்நிலையில் நேற்று, ஹேமமாலினிக்கு ஓட்டு கேட்டு, அவரது கணவரும், பாலிவுட் முன்னாள் நடிகருமான தர்மேந்திரா, தீவிர பிரசாரம் செய்தார். அப்போது, ''வாக்காளர்களாகிய உங்களது ஆதரவு இல்லாமல், மதுராவின் வளர்ச்சிக்காக, நாங்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது.

எனவே, என் மனைவிக்கு ஓட்டு போடுங்கள்,'' என, தர்மேந்திரா பேசினார்.ஹேமமாலினி, தமிழகத்தின் ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர். தர்மேந்திரா, பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இருவரும், ஹிந்தி படங்களில் ஒன்றாக நடித்தபோது, காதல் மலர்ந்து, திருமணம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X