வெல்லப் போவது எந்த, மீனா?

Added : ஏப் 15, 2019
Advertisement
 வெல்லப் போவது எந்த, மீனா?



கடந்த, லோக்சபா தேர்தலைப் போலவே, ராஜஸ்தானின், உதம்பூர் தொகுதியில், இரண்டு மீனாக்கள் போட்டியிடுகின்றனர். இருவரும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தத் தொகுதி, எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜஸ்தானில் உள்ள, 25 தொகுதிகளுக்கு, 29 மற்றும் மே, 6ல் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், உதம்பூர் தொகுதியில், 1998க்குப் பிறகு, எந்த கட்சியும், தொடர்ந்து இரண்டு முறை வென்றதில்லை; காங்கிரஸ் மற்றும், பா.ஜ., மாறி மாறி இங்கு வென்றுள்ளன.காங்கிரசின், டாக்டர் கிரிஜா வியாஸ், 1991, 1996ல் வென்றார்; 1998ல் தோல்வி அடைந்த அவர், 1999ல் மீண்டும் வென்றார். 2004ல் வென்ற, பா.ஜ.,வின், கிரண் மகேஸ்வரியை, அடுத்த ஐந்தாண்டுகளில், காங்கிரசின், ரகுவீர் சிங் மீனா வென்றார்.இந்த முறை, பா.ஜ.,வுக்கு வெற்றி முகம். 2014ல், ரகுவீர் சிங் மீனாவை, பா.ஜ.,வின் அர்ஜுன் லால் மீனா வென்றார். ரகுவீர் சிங்கின் தாய் வழி உறவினர் தான், அர்ஜுன் லால் மீனா.தற்போது, இருவரும், மீண்டும் சந்திக்க உள்ளனர். 1998க்குப் பிறகு, இரு கட்சிகளும் மாறி மாறி வென்றுள்ளதால், இந்த முறை தனக்கு தான் வெற்றி என, காங்கிரசின், ரகுவீர் சிங் மீனா நம்பியுள்ளார்.ஆனால், 'தொடர்ந்து இரண்டாவது முறையாக வென்று, தொகுதிக்கு உள்ள சாபக்கேட்டை நீக்குவேன்' என, அர்ஜுன் லால் மீனா கூறுகிறார்.- ஆபா சர்மா -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X