கணவனை தோளில் சுமக்கும் தண்டனை

Added : ஏப் 15, 2019
Advertisement

ஜாபுவா : மத்திய பிரதேச மாநிலத்தில், கள்ளக் காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு, கணவனை தோளில் சுமந்து செல்லும், வினோத தண்டனை விதிக்கப்பட்டது. ம.பி.,யில், முதல்வர் கமல்நாத் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. ஜாபுவா மாவட்டத்தில் உள்ள, தேவிகர் கிராமத்தை சேர்ந்த பெண்ணுக்கு, திருமணத்துக்கு பின், மற்றொரு இளைஞனுடன் தொடர்பு ஏற்பட்டது.சமீபத்தில், அந்த பெண், கணவனை விட்டு, கள்ளக் காதலனுடன், குஜராத் மாநிலத்துக்கு ஓடிவிட்டாள்.
அந்த பெண்ணை, அவள் கணவன் மற்றும் உறவினர்கள் தேடி கண்டுபிடித்து, சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.அந்த பெண்ணின் நடத்தையால், கிராமத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டதாகக் கூறிய கிராமவாசிகள், குறிப்பிட்ட துாரத்துக்கு, கணவனை தோளில் சுமந்து செல்லும் தண்டனையை, அந்த பெண்ணுக்கு விதித்தனர்.இதையடுத்து, கணவனை தோளில் சுமந்து சென்ற பெண், பாரம் தாங்காமல் நின்றபோது, சுற்றியிருந்தவர்கள் கத்தி, விரட்டினர்.
இதனை, அப்பகுதி மக்கள், தங்கள்மொபைல் போனில் பதிவு செய்து, சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இரண் பேரை கைது செய்தனர். மேலும் பலரைதேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X