பரூக் அப்துல்லாவுக்கு தொழிலதிபர்கள்,'செக்'

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (10)
Advertisement
பரூக் அப்துல்லா,கு தொழிலதிபர்கள்,'செக்'

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில், முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லாவுக்கு, 'செக்' வைக்கும் வகையில், இரண்டு தொழிலதிபர்களை, எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ளன. 18ம் தேதி கலவரமின்றி இங்கு தேர்தல் நடத்த, ஆணையம், ஏராளமான ஏற்பாடுகளை செய்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள, ஆறு தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், முதல் கட்ட தேர்தல், பாரமுல்லா மற்றும் ஜம்மு தொகுதிகளில், ஏப்., 11ல் அமைதியாக முடிந்துள்ளது. அனந்தநாக் அடுத்த கட்டமாக, 18ம் தேதி, ஸ்ரீநகர் மற்றும் உதம்பூர் தொகுதிகளுக்கு, தேர்தல் நடக்கிறது. லடாக் தொகுதிக்கு, மே, 6ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.அனந்தநாக் தொகுதிக்கு மட்டும், மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஸ்ரீநகர் தொகுதியில், வி.ஐ.பி., வேட்பாளராக, அந்த மாநில, முன்னாள் முதல்வர், பரூக் அப்துல்லா, தேசிய மாநாட்டு கட்சியின் சார்பில், போட்டியிடுகிறார்.



வெற்றி உறுதி

இவரை எதிர்த்து, மெஹபூபா முப்தியின், மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், அகா சையத் மொஹ்சின்; பா.ஜ., கூட்டணியில் உள்ள, மக்கள் மாநாட்டு கட்சி சார்பில், இர்பான் அன்சாரி போட்டியிடுகின்றனர். இவர்கள் இருவரும், தொழில் அதிபர்கள் ஆவர்.மேலும், ஸ்ரீநகரில் வசிப்பவர்கள், ஷியா பிரிவு முஸ்லிம்கள். அவர்களின் ஓட்டுகள் பிரிந்தால், பரூக் அப்துல்லாவுக்கு வெற்றி உறுதி என, அக்கட்சியினர் நம்பி உள்ளனர். ஆனால், பரூக் அப்துல்லாவுக்கு காங்., ஆதரவு தெரிவித்துள்ளதால், காங்., எதிர்ப்பு வாக்காளர்களின் ஓட்டுகள், எதிரணிக்கு கிடைக்கும் என, பா.ஜ., கூட்டணி நம்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஏப்-201915:13:10 IST Report Abuse
bal இந்த இரண்டு குடும்பத்தையும் நாடு கடத்தவேனும்.
Rate this:
Share this comment
Cancel
HSR - CHENNAIi NOW IN MUMBAI,இந்தியா
16-ஏப்-201911:41:23 IST Report Abuse
HSR இவரெல்லாம் தோற்றால் நாட்டுக்கு நல்லது..
Rate this:
Share this comment
Cancel
bal - chennai,இந்தியா
15-ஏப்-201913:47:25 IST Report Abuse
bal இந்த இரண்டு குடும்பத்தையும் விரட்டனும் காஷ்மீரிலிருந்து.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X