பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
PSK,raid,பி.எஸ்.கே.,ரெய்டு,சிக்கியது,ரூ.14.5 கோடி

சென்னை: தமிழகத்தில் பி.எஸ்.கே., குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் 14.50 கோடி ரூபாய் பணம் சிக்கியுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார். இது தேர்தலுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைத்திருந்த பணமா என்றும் விசாரணை நடந்து வருவதாக அவர் கூறியிருக்கிறார். மேலும் சில இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதால் அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும், தேர்தலை ஒட்டி பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் 24 மணி நேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இது தவிர வருமான வரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவல் அடிப்படையில் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி நேற்று முன்தினம் வரை 186.30 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் 2.74 கோடி ரூபாய் மதிப்புள்ள மதுபானம்; 37 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருட்கள்; 286 கோடி ரூபாய் மதிப்புள்ள

தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள்; 8.11 கோடி ரூபாய் மதிப்புள்ள இதர பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வருமான வரித்துறையினர் தனியே நடத்திய சோதனையில் 55 கோடி ரூபாய் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு துறைகளில் ஒப்பந்தப் பணி செய்து வரும் நாமக்கல்லை சேர்ந்த பி.எஸ்.கே., குழுமத்திற்கு சொந்தமான நிறுவனங்களில் இரண்டு நாட்களாக வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். இக்குழுமத்தினர் ஆளும் கட்சிக்கு நெருக்கமாக இருப்பவர்கள். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அந்த ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து அரசு பணிகளை எடுத்து செய்து வருகின்றனர்.

அவர்கள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியது தற்போதுள்ள ஆளும் கட்சியினரை மட்டுமின்றி எதிர்க்கட்சியான தி.மு.க., தரப்பையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. இந்த சோதனையில் 14.50 கோடி ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பி.எஸ்.கே., நிறுவனத்தில் 14.50 கோடி ரூபாய் சிக்கியதை சென்னையில் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு உறுதிப்படுத்தினார். இதையடுத்து பி.எஸ்.கே., குழுமத்தில் சிக்கிய பணம் பட்டுவாடா செய்வதற்காக பதுக்கப்பட்டிருந்ததா; அது எந்த கட்சிக்குரியது என்று வருமான வரித் துறையும், தேர்தல் ஆணையமும் தீவிர விசாரணை செய்து வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக மேலும் பல இடங்களில் சோதனை நடத்த வருமான வரித்துறையினர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு நெருக்கமான கான்ட்ராக்டர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

புதிய யுக்தி!

வருமான வரித்துறையினர் தேர்தல் பணப் பட்டுவாடாவை தடுக்க சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கோடிக்கணக்கான ரூபாய்களை பறிமுதல் செய்கின்றனர். இதனால் சுதாரித்துள்ள அரசியல்வாதிகள் தங்களிடம் உள்ள பணத்திற்கு பொய்யான கணக்குகளை தயார் செய்து வைத்துள்ளனர். வெவ்வேறு நபர்களிடமிருந்து பணம் வாங்கியது போல பல்வேறு போலி ஆதாரங்களையும் தயாரித்து வைத்துள்ளனர்.


சோதனை ஏன்:

எதிர்க்கட்சியினர் வீடுகளில் மட்டும் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது என்ற பேச்சை தவிர்ப்பதற்காக ஆளும் கட்சிக்கு நெருக்கமான பி.எஸ்.கே., குழுமத்தின் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம் அந்த நிறுவனம் சார்பில் தினகரன் கட்சியின் தேர்தல் செலவுக்கு பணம் வழங்கப்பட்டதால் சோதனை நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக வருமான வரித்துறை சார்பில் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.



Advertisement

வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kandhan. - chennai,இந்தியா
15-ஏப்-201918:10:40 IST Report Abuse

kandhan.எல்லாம் மோடியின் கட்டளைப்படிதான் நடக்கிறது காரணம் இங்குள்ள கோமாளிகளுக்கு அவ்வளவு புத்தி இருந்தால் அடிமையாக இருக்கமாட்டார்கள் சுயமரியாதை என்ன என்பதை அறியாதவர்கள் அண்ணாவின் பெயரில் கட்சி நடத்தி நம் தமிழ்மக்களை கேவலப்படுத்தி விட்டார்கள் இதுதான் அவாளின்சதி என்பது????????? ,கொள்ளை அடித்தாலும் அவ்வாள் எப்போதும் மாட்ட மாட்டார்கள் காரணம் அவாளின் ஒற்றுமை அப்படி........... பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்/............. உண்மை விளங்கும் கந்தன் சென்னை

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-ஏப்-201911:23:25 IST Report Abuse

வந்தியதேவன்ஆமா.... வேலூர் ரெய்டு...ன்ன உடனே... குய்யோ, முய்யோ...ன்னு கத்துன, கதறுன அல்லக்கைகள், நொள்ளக்கைகள் வரிசையில் வந்து பதில் போடவும்.... ஆர்டர்... ஆர்டர்... ஆர்டர்.....

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
15-ஏப்-201911:20:41 IST Report Abuse

வந்தியதேவன்

Rate this:
மேலும் 5 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X