எதிரிகளை குறிவைக்கும் வீராங்கனை ஸ்ரேயா சிங்

Added : ஏப் 15, 2019
Advertisement
எதிரிகளை குறிவைக்கும் வீராங்கனை ஸ்ரேயா சிங்

'காமன்வெல்த்' விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற்ற வீராங்கனை, லோக்சபா தேர்தலில், அம்மாவின் வெற்றிக்காக, பட்டி தொட்டிகளில் பிரசாரம் செய்கிறார்.பீஹாரில் உள்ள பங்கா தொகுதி, பிரபலங்களின் தொகுதி. இங்கு சமூக ஆர்வலரான மதுலிமாயி, ஜனதா கட்சி சார்பில், இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார்.முன்னாள் பிரதமர், வி.பி.சிங்கின் நெருங்கிய உறவினர், பிரதாப் சிங், இரண்டு முறை வெற்றி பெற்றுள்ளார். பீஹார் முன்னாள் முதல்வர், சந்திரசேகர் சிங், இங்கே, எம்.பி.,யாக தேர்வாகி உள்ளார்.
வெளியேற்றம்

இந்த தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர், திக் விஜய் சிங், சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம் மற்றும் சுயேச்சை என, மூன்று முறை வெற்றி பெற்றுள்ளார். இரண்டு முறை ராஜ்யசபா, எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார்; 2010ல் மறைந்தார்.இதையடுத்து, அவரது மனைவியும், முன்னாள், எம்.பி.,யுமான, புட்டுல் சிங், பா.ஜ.,வில் சேர்ந்தார். இந்த தேர்தலில், பங்கா தொகுதியில் போட்டியிட, 'சீட்' கேட்டிருந்தார். ஆனால், பா.ஜ.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்துக்கு, பங்கா தொகுதி ஒதுக்கப்பட்டது.எனவே, பா.ஜ.,வில் இருந்து வெளியேறிய, புட்டுல் சிங், சுயேச்சையாக போட்டியிடுகிறார். புட்டுல் சிங்குக்கு ஆதரவாக, அவரது மகளும், காமன் வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவருமான, துப்பாக்கி சுடும் வீராங்கனையுமான, ஸ்ரேயா சிங் பிரசாரத்தில் இறங்கியுள்ளார்.

பிரசாரம்
தன் தாயை, பா.ஜ., கை விட்டு விட்டதாகவும், தொகுதி மக்கள் கைவிட மாட்டார்கள் என்றும், அவர் பிரசாரம் செய்கிறார்.பங்கா தொகுதியில் எப்போதும் சேவையில் இருக்கும் தன் தாய், எம்.பி.,யானால், தொகுதியின் உள் கட்டமைப்புகளை ஏற்படுத்துவார் என, உறுதி அளித்து வருகிறார்.காலை, 6:00 மணி முதல் களத்தில் குதிக்கும் ஸ்ரேயா சிங், தேர்தல் மைதானத்தில், எதிரிகளை சுட்டு வீழ்த்துவாரா என்பதை, 18ம் தேதி நடக்கும் தேர்தலின் முடிவில் பார்க்க வேண்டும்.- கன்ஹையா பெலாரி -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X