பதவிக்காக எங்கள் குடும்பம் மாறவில்லை :'மாஜி' சுக்ராமின் மகன் தடாலடி பேட்டி

Added : ஏப் 15, 2019
Advertisement
பதவிக்காக எங்கள் குடும்பம் மாறவில்லை :'மாஜி' சுக்ராமின் மகன் தடாலடி பேட்டி

ஹிமாச்சல பிரதேசத்தில், முதல்வர், ஜெய் ராம் தாக்குர் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. மாநிலஅமைச்சர் பதவியில் இருந்து, அனில் சர்மா விலகியுள்ளார். இவர் முன்னாள் மத்திய அமைச்சர், சுக்ராம், 92, மகன்.பேரன் ஆஸ்ரே சர்மாவுக்கு தேர்தலில் போட்டியிட, பா.ஜ.,வில் வாய்ப்பு கிடைக்காததால், பேரனுடன் காங்கிரசில் சேர்ந்தார், சுக்ராம். இந்த விவகாரத்தால், நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாகவும், மூன்று முறை மாநில அமைச்சராகவும் இருந்துள்ள, ராஜ்யசபா முன்னாள், எம்.பி., அனில் சர்மா, அமைச்சர் பதவியை, சமீபத்தில் ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் பதவியில் இருந்து மட்டும் ராஜினாமா செய்துள்ளீர்கள்.எம்.எல்.ஏ., பதவியை ஏன் ராஜினாமா செய்யவில்லை?

என் தொகுதியில், முதல்வர் ஜெய்ராம் தாக்குர் பிரசாரம் செய்த போது, என்னை பற்றியும், என் குடும்பத்தை பற்றியும் மோசமாக விமர்சித்துள்ளார். இதனால், நான் வேதனை அடைந்தேன். என்னால், என் மகனுக்கு எதிராகவோ, பா.ஜ.,வுக்கு ஆதரவாகவோ பிரசாரம் செய்ய முடியாது. அதனால், அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளேன்.

நீங்கள், பா.ஜ., சார்பில் போட்டியிட்டு, சட்டசபை தேர்தலில் வென்றவர். தார்மிக அடிப்படையில், அந்தப் பதவியையும் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா?

என் விருப்பத்தில், பா.ஜ.,வில் சேரவில்லை. 2017ல், காங்கிரஸ்அமைச்சராக இருந்தபோது, பா.ஜ.,வைச் சேர்ந்த சிலர் என்னை தொடர்பு கொண்டனர். அக்கட்சியின் கோரிக்கையை ஏற்றே, பா.ஜ.,வில் இணைந்தேன். பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வென்றேன்.அமைச்சர் பதவி என்பது, முதல்வரின் விருப்பத்துக்கு ஏற்றது. அதனால் அதை, ராஜினாமா செய்தேன்.அதே நேரத்தில், என்னை நம்பி தேர்ந்தெடுத்த மக்களுக்கு, நான் கடமைப்பட்டுள்ளேன். அதனால், என் பதவி காலம் முழுவதும், மக்களுக்கு சேவையாற்றுவேன்.

உங்கள் தந்தையும் சரி, நீங்களும் சரி, பதவிக்காக பல கட்சிகள் மாறியவர்கள் என்ற விமர்சனம் உள்ளது. உங்களுக்கு, குடும்ப நலன் மட்டும் தான் முக்கியமா?

இது, உண்மை இல்லை. என் தந்தை, சுக்ராம், காங்கிரசில் இருந்து நீக்கப்பட்டவர். அதனால், 1997 - 98ல் நாங்கள், ஹிமாச்சல் விகாஸ் காங்கிரஸ் என்ற கட்சியை துவக்கினோம்.அப்போது, பா.ஜ.,வுக்கு ஆட்சி அமைக்க போதிய பலம் இல்லாததால், நாங்கள் ஆதரவு அளித்தோம். முழு காலத்தையும் அந்த அரசு நிறைவு செய்தது. லோக்சபா தேர்தலின்போது, காங்கிரஸ் முதல்வராக இருந்த வீர்பத்ர சிங், தன் மனைவி பிரதிபா சிங், மண்டி தொகுதியில் வெற்றி பெற உதவும்படி, என் தந்தையிடம் கேட்டுக் கொண்டார்.அதனால், எங்கள்கட்சியை, காங்கிரசுடன் இணைத்தோம். 2017,சட்டசபை தேர்தலின் போது, என்னை கட்சிக்கு வரும்படி, பா.ஜ., அழைத்தது. நான் சேருவது, என் தந்தைக்கே தெரியாது. நாங்களாக எந்தக் கட்சிக்கும் போகவில்லை.

உங்கள் மகன், ஆஸ்ரேசர்மாவுக்கு, மண்டிதொகுதியில் போட்டியிட, பா.ஜ., வாய்ப்பு தராததால், காங்கிரசில் சேர்ந்துள்ளார். இதற்கு உங்கள் விளக்கம் என்ன?

இது உண்மை தான். என் மகன், தீவிர அரசியலில் ஈடுபட நினைத்துள்ளார். அதற்கான தகுதி, அவருக்கு உள்ளது. ஆனால், அவருக்கு வாய்ப்பு தருவதற்கு, பா.ஜ., மறுத்துள்ளது. அதனால் பேரனின் ஆசையை நிறைவேற்ற, என் தந்தை முயன்றார்.தாய் கட்சியான, காங்கிரசிடம் அவர் பேசினார். காங்., தலைவர், ராகுலிடம் அவர் பேசினார். என் மகன்,மண்டியில் போட்டியிட, காங்., வாய்ப்பு தந்துள்ளது.

உங்கள் நிலை என்ன? மகனுக்காக பிரசாரம் செய்வீர்களா?

நான் பிரசாரம் செய்ய மாட்டேன். மண்டியில் பிரசாரம் செய்ய மாட்டேன் என, முதல்வரிடம் கூறினேன். மற்ற தொகுதிகளில் பிரசாரம் செய்யும்படி கூறினார். ஆனால், அதற்கான வாய்ப்பு, தற்போது இல்லை. காங்கிரசுக்கும் நான் பிரசாரம் செய்ய மாட்டேன்.


உங்கள் மகனின் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

தற்போது, மண்டி தொகுதி யின், எம்.பி.,யாக உள்ள, ராம் ஸ்வரூப் சர்மாவின் செயல்பாடுகளில், மக்களுக்கு திருப்தி இல்லை என்பது மட்டும், தெளிவாக தெரிகிறது. மக்களின் முடிவு எப்படி இருக்கும் என்பதை, இப்போதைக்கு கணிக்க முடியாது.

சல்மான் ஆலோசனை
கடந்த சில நாட்களாகவே, அனில் சர்மா பதவி விலகுவார் என்று பேச்சு அடிபட்டு வந்தது. முதல்வர் ஜெய்ராம் தாக்குர், அவருக்கு நிர்பந்தம் கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.ஆனால், பதவி விலகும் முடிவை, அனில் சர்மா எடுத்ததற்கு, சம்பந்தியான, பிரபல பாலிவுட் நடிகர், சல்மான் கானின் ஆலோசனையே காரணம் என, கூறப்படுகிறது.சல்மானின் சகோதரி, அர்பிதாவின் கணவரான, ஆயுஷ் சர்மா, அனில் சர்மாவின் இளைய மகன்.இந்தப் பிரச்னை குறித்து பேசியபோது, 'மகனுக்கு ஆதரவாக இருங்கள்' என, சல்மான் கூறியுள்ளார். அதையடுத்தே, அமைச்சர் பதவியில் இருந்து விலகும் முடிவை, அனில் சர்மா எடுத்ததாக கூறப்படுகிறது.- அஸ்வனி சர்மா -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X