ஹரியானா, ஹிமாச்சலில் இவ்வளவுதான்...

Added : ஏப் 15, 2019
Advertisement

ஹரியானாவிலும் கூட்டணி!

பஞ்சாபில் அமைத்துள்ள கூட்டணியை, ஹரியானாவிலும் தொடர, பா.ஜ., - சிரோன்மணி அகாலி தளம் முடிவு செய்துள்ளன. பஞ்சாபில் உள்ள, 13 தொகுதிகளில், 10ல் அகாலி தளம், மூன்றில், பா.ஜ., போட்டியிடுகின்றன. ஹரியானாவில் உள்ள, 10 தொகுதிகளிலும், பா.ஜ., போட்டியிடுகிறது; பா.ஜ.,வுக்கு, அகாலி தளம் ஆதரவு அளிக்கிறது.அதே நேரத்தில், ஹரியானாவில் இந்த ஆண்டு நடக்க உள்ள சட்டசபை தேர்தலின் போது, அகாலி தளத்துக்கு, சில இடங்கள் ஒதுக்கப்பட உள்ளன. லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, எந்தெந்த தொகுதிகள் என்பது, முடிவுசெய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மகிழ்ச்சியுடன் இருங்க!



லோக்சபா தேர்தலால், அரசியல் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள், ஒரு மாதத்துக்கு மேலாக கடுமையாக சுற்றிச் சுழன்று பணியாற்றிவருகின்றனர். அது போலவே, தேர்தல் பணியாற்றும் அதிகாரிகளும், மிகவும், 'பிசி'யாக உள்ளனர்.அதிகாரிகளை மகிழ்ச்சியுடன் வைத்திருக்க, ஹரியானாவின், கைதால் மாவட்ட நிர்வாகம், புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளை, சினிமாவுக்கு அழைத்துச் சென்றுள்ளது. வேலை வேலை என, பிசியாக உள்ள அதிகாரிகள், இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


யார் வேட்பாளர்?


பஞ்சாபில் உள்ள, 13 தொகுதிகளுக்கும், மே, 19ல் தேர்தல் நடக்க உள்ளது. மத்திய அமைச்சராக உள்ள, அகாலி தளத்தின், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் தொகுதியான, பதிண்டாவில், ஆம் ஆத்மி சார்பில், பல்ஜிந்தர் கவுர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.தற்போது, எம்.எல்.ஏ.,வாக உள்ள அவர், கட்சியின் மாநில மகளிர் அணித் தலைவராகவும் இருக்கிறார்.பஞ்சாப் ஜனநாயக முன்னணி சார்பில், ஆம் ஆத்மியில் இருந்து விலகிய, சுக்பால் கைரா, வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்; காங்கிரஸ் மற்றும் அகாலிதளம், வேட்பாளரை அறிவிக்கவில்லை.


போன் மூலம் பிரசாரம்!



மத்திய ஜவுளித் துறை அமைச்சர், ஸ்மிருதி இரானி, கோடைக் காலங்களில், ஹிமாச்சலில் உள்ள மலை பிரசேதங்களில், ஓய்வெடுப்பது வழக்கம். தற்போது, உத்தர பிரதேசத்தின், அமேதி தொகுதியில், காங்.,தலைவர் ராகுலை எதிர்த்து அவர் போட்டியிடுகிறார். அதனால், அங்கு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.இந்நிலையில், ஹிமாச்சலின் ஹமிர்புர் தொகுதியில் போட்டியிடும், அனுராக் தாக்குருக்கு ஆதரவாக, ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்ய வருகிறார் என்ற தகவல் பரவியது. முன்னாள், 'டிவி' நடிகையான, ஸ்மிருதி யை பார்க்க, பெண்கள் அதிக அளவில் கூடியிருந்தனர். உடனே, தன் மொபைல்போனில், ஸ்மிருதியை படம் பிடித்தார், அனுராக் தாக்குர். அதன் வழியே, ஸ்மிருதி இரானி பிரசாரம் செய்தார்.


திரிசங்கு நிலையில்...


பா.ஜ.,வைச் சேர்ந்த, மூன்று முறை, எம்.பி.,யாக இருந்த, சுரேஷ் சந்தல், ஹமிர்புர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அனுராக் தாக்குர் மாற்றப்பட மாட்டார் என்பதால், தனக்கு வாய்ப்பு கிடைக்காது என்பதை உணர்ந்தார்.ஹமிர்புர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு, காங்.,கில் சேர்ந்தார். ஆனால் காங்., முன்னாள் அமைச்சர் ராம் லால் தாக்குரை வேட்பாளராக அறிவித்தது.அதனால், இந்தத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு, சுரேஷ் சந்தலுக்கு கிடைக்கவில்லை. பா.ஜ.,வுக்கும் போக முடியாது; காங்.,கிலும் தொடர முடியாது என, திரிசங்கு நிலையில் உள்ளார்.


வலியில்முதல்வர்!



ஹிமாச்சல் முதல்வர், ஜெய்ராம் தாக்குர், கடுமையான வலியில் உள்ளார். அமைச்சர் பதவியில் இருந்து, அனில் சர்மா விலகியதால் அல்ல; பிரசாரத்துக்காக சென்றபோது, அவருடைய கால் இடறியது.இதில், சுளுக்கு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.பரிசோதித்த டாக்டர்கள், சில நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.ஆனால், மே, 19ல் தேர்தல் முடியும் வரை ஓய்வு என்பதே கிடையாது என்று கூறி, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.- ஸ்மிருதி சர்மா -சிறப்பு செய்தியாளர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X