சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பா.ஜ.,வுக்கு ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை

Added : ஏப் 15, 2019
Advertisement

தஞ்சாவூர் : தஞ்சைஅருகே, பா.ஜ.,வுக்கு ஆதரவாக ஓட்டு கேட்ட முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.தஞ்சாவூர், ஒரத்தநாடு அருகேயுள்ள தென்னமநாடு கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கோவிந்தராஜ், 75. இவர், ஒரத்தநாட்டில் உள்ள கால்நடை பண்ணை அலுவலக ஊழியராக இருந்து, ஓய்வு பெற்றவர்.இவர், பா.ஜ., மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்.இதனால், லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக, ஒரத்தநாடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், தனியாகவே சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

பார்ப்பவர்களை எல்லாம், 'மோடிக்கு ஓட்டு போடுங்கள்' என சொல்வாராம். ஒரத்தநாடு அண்ணா சிலை அருகே, நேற்று முன்தினம் இரவு, மோடியின் படத்தை கழுத்தில் போட்டு, கோவிந்தராஜ் பிரசாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்ற கண்ணந்தங்குடி மேலையூரைச் சேர்ந்த கோபிநாத், 33, என்ற டிரைவர், 'எதற்கு மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறாய்' எனக் கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கடுமையாக தாக்கியுள்ளார். மயங்கி விழுந்த கோவிந்தராஜ், ஒரத்தநாடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இறந்தார். கோவிந்தராஜ் மகள் புகாரின்படி, ஒரத்தநாடு போலீசார், கோபிநாத்தை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X