அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து எதிர்ப்பு, சாதிக்பாட்ஷா மரணம்; தி.மு.க.,வுக்கு நெருக்கடி தரும் பிரசாரம்

Updated : ஏப் 15, 2019 | Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (158)
Advertisement

தி.மு.க., கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க, தி.மு.க.,வினரின், ஹிந்து விரோத பேச்சு, ஸ்டாலின் நண்பர் சாதிக்பாட்ஷா மரணம் ஆகிய விவகாரங்களை, மக்களிடம் எடுத்துச் செல்ல, அ.தி.மு.க., தலைமை முடிவு செய்துள்ளது.


தமிழகத்தில், தேர்தல் பிரசாரம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி இடையே, கடும் போட்டி நிலவுகிறது. அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர், பிரசாரம் செய்து வருகின்றனர். தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி ஆகியோர், பிரசாரம் செய்து வருகின்றனர். இரு கட்சிகள் சார்பிலும், தேர்தல் அறிக்கைகள் வெளியிடப்பட்டன; அதை யாரும் கண்டுகொள்ளவில்லை.

இரு தரப்பினரும் பிரசாரத்தில், தேர்தல் அறிக்கை குறித்தோ, தொலைநோக்கு திட்டம் குறித்தோ, அதிகம் பேசவில்லை. மாறாக, இதுவரை இல்லாத அளவிற்கு, தனி நபர் தாக்குதலில் தான் ஈடுபட்டு உள்ளனர். நீலகிரி மாவட்டம், கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில், முதல்வரை சம்பந்தப்படுத்தி, ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அத்துடன் ஒருமையிலும் பேசுகிறார். இது, முதல்வரை கோபப்படுத்தி உள்ளது.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அவரும் ஒருமையில் திட்டுவதோடு, 'கருணாநிதியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், வீட்டிலேயே சிறை வைத்திருந்தனர்' என, குற்றம் சாட்டியுள்ளார். அத்துடன், ஸ்டாலினுக்கு எதிராக, அவரது நண்பர் சாதிக்பாட்ஷாவின் மர்ம மரணம் விவகாரத்தையும், அ.தி.மு.க.,வினர் மீண்டும் கிளப்புகின்றனர்.

சமீபத்தில், சாதிக்பாட்ஷா மனைவி, டில்லியில், ஜனாதிபதியை சந்தித்து, தன் கணவர் மரணம் குறித்து, மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதை பிடித்துக் கொண்ட, அ.தி.மு.க., தலைமை, இவ்விவகாரத்தை பிரசார ஆயுதமாக பயன்படுத்த, முடிவு செய்துள்ளது. அதேபோல், ஹிந்து மத கடவுளான கிருஷ்ணரை, தி.க., தலைவர் வீரமணி இழிவாக பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதன் தொடர்ச்சியாக, 'ஹிந்து மத விரோத கூட்டணியான, தி.மு.க.,வுக்கு ஓட்டளிக்காதீர்கள்' என, ஹிந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள், பிரசாரம் செய்து வருகின்றனர். இதற்கு, ஹிந்துக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், எந்தத் தேர்தலிலும் இல்லாமல், இந்த தேர்தலில், ஹிந்து ஓட்டு என்ற பிரசாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இது, தி.மு.க., கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இதை அறிந்த ஸ்டாலின், தேர்தல் பிரசாரத்தில், ஹிந்துக்களுக்கு எதிரானதல்ல, தி.மு.க., என, விளக்கம் கூறி வருகிறார்.

'ஹிந்து விரோத கட்சி, தி.மு.க., என்று, சமூக வலைதளங்களில் பிரசாரம் செய்வோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று, தேர்தல் ஆணையத்திலும், தி.மு.க., சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க.,வினரிடம் ஏற்பட்ட கலக்கம், அ.தி.மு.க., கூட்டணிக்கு, உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, இவ்விரு விவகாரங்களையும், முக்கிய பிரசார ஆயுதமாக பயன்படுத்த, அ.தி.மு.க., கூட்டணியினர் முடிவு செய்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க, தி.மு.க.,வினரும் தயாராகி வருகின்றனர்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (158)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
21-ஏப்-201920:46:12 IST Report Abuse
Poongavoor Raghupathy ADMK is quite right to take both these issues against DMK. DMK is definitely Hindus and they call themselves as Dravidians without knowing who are Dravidians. Aryans-Dravidians-Tamilians- are all the confusions d by DMK and DK. Tamilnadu people must not vote for DMK who are Hindu haters and GOD haters.
Rate this:
Share this comment
Cancel
Mohan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-201914:51:55 IST Report Abuse
Mohan .... TRY TO PROVE YOURSELF....HOW MUCH OTHER COMMUNITY GET HURTED BECAUSE OF YOUR BEHAVIOURS....JAIHIND
Rate this:
Share this comment
Cancel
Sukumar Talpady - Mangalore ,இந்தியா
18-ஏப்-201920:38:35 IST Report Abuse
Sukumar Talpady எவ்வளவுதான் தி மு க வையும் , தி க வையும் விமரிசித்து நாம் எழுதினாலும் , அவர்களின் சந்தர்ப்பவாத அரசியல் பற்றியும் , தன்மானம் இல்லாத இந்த மூர்க்கர்களைப் பற்றியும் பேசினாலும் , தமிழர்களில் முட்டாள்கள் அதிகம் இருக்கின்றனர் .இவர்கள் எல்லாம் தி மு க தான் தமிழை காப்பாற்றும் கட்சி என்று ஒரு வித மயக்கத்தில் இவர்களை ஆதரிக்கின்றனர் . இவர்கள் கொடுக்கும் பணத்திற்கு ஆசைப் பட்டு வாக்களிக்கின்றனர் . தி மு க மற்றும் தி க இரண்டு காட்சிகள் தான் தமிழை அழிக்கின்றனர் . இப்பொழுது இருக்கும் பல கட்சி தலைவர்களுக்கு , தொண்டர்களுக்கு , மாணவ மாணவிகளுக்கு தமிழை சரியாக பேசத்தெரிகிறதா ? எழுதத்தெரிகிறதா ? கருணாநிதி பெரிய முத்தமிழ் அறிஞர் என்று சொன்னார்கள் , அவர் மூட்டை முத்தையாக சொத்துகளை கொள்ளை அடித்து தன்வாரிசுகளுக்கு கொடுத்து சென்றுள்ளார் . ஆனால் உண்மையான தமிழன் வறுமையிலேயே இருக்கிறான் . இந்த தமிழன் மாறும் வரை தி மு க தலைவர்களும் , குடும்பமும் தி க வின் வீரமணியும் கொள்ளை அடித்து கொண்டுதான் இருப்பார்கள் . இது தமிழனின் தலை எழுத்து . கஷ்டங்களை அனுபவித்து கொண்டிருந்தாலும் அறிவு வராது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X