அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமர் மோடியின் சாதனை வெற்றி பெற வைக்கும்

Added : ஏப் 15, 2019
Advertisement

-திருமங்கலம் : ''பிரதமர் மோடியின் சாதனை தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணியை வெற்றி பெற வைக்கும்,'' என, திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் கூறினார்.விருதுநகர் லோக்சபா தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் அழகர்சாமியை ஆதரித்து அமைச்சர் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் பிரசாரம் செய்தார். முன்னதாக வரத வேங்கடராஜ பெருமாள் கோயிலில் கட்சியினருடன் தரிசித்தார். பின் அவர் கூறியதாவது: அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி தேர்தலில் தோற்கும் என தினகரன் பகல் கனவு காண்கிறார். அவரது கனவு பலிக்காது. கனவு காண அவருக்கு உரிமை உண்டு.
குறை சொல்வதை தவிர தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு வேறு எதுவும் தெரியாது. நாங்கள் செய்த சாதனைகள், திட்டப்பலன்கள் மக்களுக்கு தெரியும். விரைவில் ஸ்டாலின் அரசியல் துறவறம் மேற்கொள்வார். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலிலும் பிரசாரம் துவங்கியுள்ளோம். மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜ., ஆட்சி மீண்டும் அமைந்ததும் தமிழகத்திற்கு மேலும் அதிக திட்டங்கள் கிடைக்கும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X