அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தின் கொத்தடிமைகளா சிவகங்கை மக்கள்

Added : ஏப் 15, 2019
Advertisement

சிவகங்கை : ''35 ஆண்டுகளாக சிதம்பரம் குடும்பத்திற்கு ஓட்டளித்து கொத்தடிமையாக இருந்த சிவகங்கை மக்கள், அடிமை சங்கிலியை உடைத்து வெளியே வாருங்கள்,'' என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் பேசினார். பா.ஜ., வேட்பாளர் எச்.ராஜாவை ஆதரித்து சிவகங்கையில் அவர் பேசியதாவது: முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரம் மகன் கார்த்தியை பற்றி சொல்ல வேண்டுமானால் ஒரு கதை நினைவுக்கு வருகிறது. ஆஸ்திரேலிய விலங்கான கங்காரு அடிவயிற்றில் குட்டியை சுமந்து கொண்டே இருக்கும்.
சிதம்பரம் வயிற்றில் இருக்கும் குட்டிதான் கார்த்தி. 1984 ல் சிவகங்கையில் இருந்து தேர்வாகி சென்ற சிதம்பரம், 35 ஆண்டுகளாக தொகுதிக்கு ஒன்றும் செய்யவில்லை. குடிநீர் பிரச்னையை கூட தீர்க்கவில்லை. நிதி அமைச்சராக நாட்டுக்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. அமைச்சராக இருந்த போது விமானத்தில் ஏறினால் டில்லி, சென்னை, காரைக்குடி என பறந்தாரே தவிர மக்கள் நலனின் அக்கறை கொள்ள வில்லை.
'தன் வினை தன்னைச் சுடும்' என பட்டினத்தார் கூறி உள்ளார். அதுபோல சிதம்பரம் அடித்த கொள்ளைக்கு அமலாக்கத்துறை, சி.பி.ஐ., நீதிமன்றம் என அலைந்து கொண்டிருக்கிறார். சிதம்பரம் என்ற கங்காரு 8 அடி பாய்ந்தால், குட்டி கங்காரு கார்த்தி 16 அடி பாயும் என்பதற்கேற்ப வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்துள்ளார். 1996ல் நிதி அமைச்சரான சிதம்பரமும், முதல்வரான கருணாநிதியும் இணைந்து அ.தி.மு.க.,வை அழிக்க திட்டமிட்டனர்.
அதிகாரத்தை பயன்படுத்தி அ.தி.மு.க., மீது வருமான வரித்துறை 'ரெய்டு' நடத்தினர். தந்தையை போல கார்த்தியும் பொய் போர்வையில் உலா வருகிறார். 35 ஆண்டுகளாக சிதம்பரம் குடும்பத்திற்கு ஓட்டளித்து, சிவகங்கை மக்கள் கொத்தடிமைகளாக இருந்துள்ளீர்கள். இத்தேர்தலில் அதற்கு முற்றுப்புள்ளி வைத்து, நீங்களே போட்டுக்கொண்ட அடிமை சங்கிலியை அறுத்து எறிந்து வெளியே வாருங்கள். இவ்வாறு பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X