அரசியல் செய்தி

தமிழ்நாடு

கடைசி நேர தினகரன் கவனிப்பு அ.ம.மு.க வேட்பாளர்கள் குஷி

Added : ஏப் 15, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை : தினகரனின் கடைசி நேர கவனிப்பால், அ.ம.மு.க., வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள், குஷி அடைந்துள்ளனர். தமிழகத்தில், 40 லோக்சபா தொகுதிகள்; முதற்கட்டமாக இடைத்தேர்தல் நடக்கும், 18 சட்டசபை தொகுதிகளிலும், அ.ம.மு.க., சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில், தன் கட்சி வேட்பாளர்களுக்காக, அக்கட்சியின் துணைப் பொதுச்செயலர், தினகரன், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
திருச்சியில், சாருபாலா; திருவள்ளூரில், பொன் ராஜா; நாகபட்டினத்தில், செங்கொடி; கன்னியாகுமரியில், லட்சுமணன்; தென்காசியில், பொன்னுதாய்; ஈரோட்டில், செந்தில்குமார் உள்ளிட்ட பல வேட்பாளர்கள், செலவிற்கு பணம் இன்றி திண்டாடினர். இதனால், வேட்பாளர்கள் பிரசாரத்திற்கு செல்லாமல், அந்தந்த பகுதி நிர்வாகிகள் வாயிலாக, ஆட்டோ பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுகுறித்து, தேனி வேட்பாளர், தங்கதமிழ்செல்வன், தர்மபுரி வேட்பாளர், பழனியப்பன் ஆகியோர், தினகரனிடம் முறையிட்டனர். 'விரைவில் உதவிகள் வழங்கப்படும்' எனக்கூறிய தினகரன், பணம் கொடுக்காமல், காலம் கடத்தி வந்தார். இதனால், அ.ம.மு.க., வேட்பாளர்கள் பலரும் விரக்தியில் இருந்தனர்.
திருச்சியில், வேட்பாளருக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் இடையே, தேர்தல் செலவு தொடர்பாக மோதல் ஏற்பட்டது. இதுவும், தினகரனிடம் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தினகரன் தரப்பில் வேட்பாளர்களுக்கு, உரிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. கடைசி நேரத்தில், தினகரனின் திடீர் கவனிப்பால், வேட்பாளர்கள் மட்டுமின்றி, கட்சி நிர்வாகிகளும், குஷியாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
15-ஏப்-201907:37:12 IST Report Abuse
Bhaskaran பணத்தை வேட்பாளர்கள் அமுக்கிவிடாமல்வாக்காளர்களுக்கு கொடுக்கணும் அவர்களிடம் சசி கும்பல் கொள்ளையடித்த வரிப்பணம் தான் இது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X